வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

மறந்துபோன பறவை நீ!

Tuesday, November 02, 2010

என் இதயத்தில் கூடுகட்டிவிட்டு
எங்கோ பறந்து போன
எனை மறந்துபோன பறவை நீ!

இப்போது நீ வசிப்பது
எக்கிளையில்?

நிறைகுடம்  தழும்பாது
உண்மைதான் அதனால்தான்
வார்த்தைகள் எவ்வளவோ இருந்தும்
அரசின் சலுகைகள் போல
சிறிது சிறிதாக வெளியிட்டாய்!


நீ பேசும்போது ஒவ்வொரு
வார்த்தைகளும் ஓர் உளி!
கல்வெட்டிற்கான கல்லாய் என் இதயம்....

என் இதயத்தில் சிந்திவிட்ட
பாதரசமான் உன்னை
பொறுக்கியெடுக்கும்
பொறுமையும் கைகளும் எனக்கில்லை!


நீ ஒரு தொட்டாச்சினுங்கி
தெரியாமல் தொட்டுவிட்டேன்
தொட்டவனே பின்னர் சினுங்கினேன்...


என் தோளில் நீ சாயும் போது
பைசாநகரத்து கோபுரம்


எனை தீண்டும்போது தென்றல்..

சில்மிஷம் செய்யும்போது குழந்தை!

நீ இமைத்ததால்  வீசும்   காற்றில்
நான் குளிர் காய்கிறேன்..
நீ தூரமாய் இருப்பதால் யாரும் இதை
நம்புவதில்லை

மரங்கள் அருகில் இருந்தால் மட்டுந்தான்
காற்று வருமா?

உன்னை என் இதயத்தில்வைக்க
எனக்கு இஸ்டமில்லை

இதயம் என்பது தண்ணீரிலிருந்து
தூக்கியெறியப்பட்ட ஒரு மீன்!
அதில் உன்னையும் துடிக்கவைக்க
எனக்கு சம்மதமில்லை!

இந்த ஷாஜஹானுக்கு
உன் நினைவுகளே ஒரு நினைவு சின்னம்!

3 பேர் சொன்னது....:

அம்பாளடியாள் said...

அருமையான காதல்க் கவிதை வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .இன்னும் முயற்சியுங்கள்
உங்களுக்கும் தரமான கவிதைகள் பிறக்கும் .......

அம்பாளடியாள் said...

உணர்வுகள் இழந்த ஜென்மம் ஒன்று இதற்கும் மைனஸ் ஓட்டுப் போட்டிருக்கு .கவலையை விடுங்கள் .தமிழ்மணம் 1

Unknown said...

அம்பாளம்மாள் ரொம்ப நன்றி...ஆனால் என்னை இன்னொருமுறை திட்டாதிங்க...குழபமா இருக்கா?ப்ளாக்குக்கு நான் புதுசு..அது என்ன சிம்பள்னு எனக்கே தெரியாம நானே எனக்கு போட்டுக்கொண்ட மைனஸ் ஓட்டு அது...

அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க

Post a Comment