வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

பள்ளிக் கூடு!

Wednesday, January 04, 2012



ஒரே கூட்டில் வாழ்ந்த
பறவைகள் இன்று
பிரியப்போகின்றன..
இரைக்காகவோ இல்லை
இரையாகவோ??

உண்மையான நட்பிற்கு
உதாரணமாய் நம்
அனைவரையும் காலம்
 அடையாளம்காட்டியது!

நண்பனே!
என் நினைவுகள்
மறக்கமுடியாமல்
மறுதலித்தது உங்களைதான்!

தோழியே!
நம் இருவருக்கும்
இடையில் மட்டும்தான்
நாகரீகத்தின் கற்பு
நசுக்கப்படாமல் இருந்தது!

மறதிக்கு விதிவிலக்கு
பள்ளிக்கால நினைவுகள் மட்டும்..

அந்த மச்சான் மாப்பிள்ளை
நண்பர்களின் விளித்தல்கள்
எப்போதும் காதில்
எதிரொலிக்கும்!

மேகத்திலிருந்து
மழைத்துளிகளாய் சிதறிவிட்டோம்!
இனி மீண்டும் சேருமிடம் எது?

உள்ளங்கை ரேகைகள்போல்
ஒன்றாய்தானிருந்தோம்
அச்சத்தீர்க்க ரேகைகளாய் ஏன்
அன்னியமானோம்?

நாம் ஒரே வானில் முழு
நிலவு!
நட்ச்சத்திரங்களாய்
நம்மை பிரித்தது எது?


ஒருவேளை நமக்கு
இது பிரிவு இல்லையோ?


சூரியன் பிரிவது
இன்னொரு விடியலுக்குத்தானோ?


இப்படித்தான் என்னை
தினமும்
தேற்றிக்கொள்கிறேன் நண்பர்களே!


ஒரே வெள்ளத்தில்
அடித்துச்செல்லப்பட்ட செடிகொடிகளா
நாம் அனைவரும்?

சரிதான்..
பிரிவுகூட சிலநேரம்
பிரியமனதுதான்!

கண்கள் பிரிந்திராவிட்டால்
பார்வை இல்லை!

பாதம் பிரிந்துவிட்டால்
பயணம் இல்லை!

ஆணும் பெண்ணும் பிரிந்திராவிட்டால்
அன்பே இல்லை!

அதனால்தான்
அனைவரும் பிரிந்து விட்டோமோ??