வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

என்னையும் தமிழையும் காப்பாற்று!

Tuesday, November 15, 2011

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"

எப்போதும் வயிறையே பார்த்துக்கொண்டிருப்பதால் அவனுக்கு நிமிர ஏது நேரம்?
தமிழ் என் உயிர் மூச்சு என மூச்சுக்கு நாணூறு தடவை சொல்லும் சில அரசியல் வாதிகளே!
உங்கள் பிள்ளைகளில் ஒருவரை..அல்லது பேரக்குழந்தைகளை..இல்லைவிடுங்கள்..உங்கள் பரம்பரையில் ஒருவரை என்றாவது தமிழ் மீடியத்தில் படிக்க வைத்ததுண்டா?
சாரி..சாரி..(டாய் சேக்..நீயுமா அந்த வரிசையில்??)..உங்களுக்கும் தமிழ் பற்று உண்டு.....


நீங்கள்அதை காட்டுவது எதில் தெரியுமா?

உங்கள் கவிதைகளில்..வசனங்களில்(வாவ்! பிரமாதம்!)


ஆனால் செயல் முறையில்?????

தமிழுக்காக உழைத்தவர்களை அடையாளம் காட்ட சொன்னால் சுடுகாட்டிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை..


முன்பெல்லாம்..
"அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!"பாட்டுப்பாடி குழந்தைகளுக்கு உணவளிப்பதுண்டு..ஆனால் இன்று
"ரெயின் ரெயின் கோ அவே
கம் கம் அனதர் டே"என சொல்வதும்...
ஏன் நம் பேச்சு வழக்குகளில் கூட நைட்,டின்னர்..என நம்மை மறந்து தமிழை மறப்பதும்,,மறுப்பதும்....

எதைக் காட்டுகிறது??

நாம் உண்மையான தமிழர்கள் என்றா??


"ஒரு புரட்சியாளன்
விழாவின்போது வியக்கப்படுகிறான்
விடிந்ததும் மறக்கப்படுகிறான்"என்பதுகேற்றவாறு
தமிழை நாம் அனைவரும் நினைவு கூறுவது தமிழ் புத்தாண்டு அன்றுதானே?

தமிழும் தமிழர்களும் ஒரு ஒற்றையடிப் பாதையில் ஒன்றாய்தான் நடுந்து வந்துகொண்டிருந்தார்கள்
ஆனால் இப்போது தமிழர்கள் சற்றே திரும்பி பார்க்கிறார்கள்..தூரத்தில் தமிழ் சிறிய புள்ளியாய்......

ஆங்கிலம் படித்தால்
அயல் நாட்டிற்கு போகலாம்
தமிழ் படித்தால்
வயல் காட்டிற்கு போகலாம்..


அப்படியா என் செல்வங்களே???

சரி போனது போகட்டும்..இனியாவது திருந்தி தமிழை வாழவிடுங்கள்..ஏதும் தப்பா சொல்லிருந்தா சாரி...(சே சே..உங்க கூட சேர்ந்து நானும் கெட்டுபோயிட்டேன்)

இறைவா!இந்த கூட்டதிலிருந்து என்னையும் தமிழையும் காப்பாற்று!