வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

குடும்ப வறுமையால் சலூன் கடை நடாத்தும் பட்டதாரி பெண்!

Sunday, August 11, 2013

devi 

யாரப்பா சொன்னது?வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று!

இங்கே பாருங்கள்....வல்லவிக்கு புல்லும் ஆயுதம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார்.
 37
 
- See more at: http://tamilcloud.com/news/graduate-girl-work-saloon/#sthash.I8Y39BMC.dpuf
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார்.

உப்புக்கருவாடு மனிஷாவா இப்படி???

manisha 

பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது.

அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார். முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.

இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார். இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.