வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

தமிழக மக்கள் பாவம்தான்...

Saturday, November 19, 2011

காலை..வழக்கம்போல் வேலைக்காக பேருந்தில் அமர்ந்து நடத்துனர் பயணச்சீட்டு கேட்டதும் பணம் கொடுக்கும் போதுதான் தெரியவந்தது இந்த கொடுமை!

(யாரும் தப்பா நினைக்க வேண்டாம்..பேப்பர் படிப்பதை நிறுத்தி ஒரு மாதமாச்சி)

அட இது என்ன பிரமாதம்?அனைத்து அரசு ஊழியர்களுக்கும் காலையில்தாம் தெரியுமாம்!

விசயம் உங்களுக்கு புறியலையா?
அதான் பேருந்து கட்டண உயர்வும்,பால் உயர்வும்!

பேருந்து முழுக்க ஒரே அழுகை சத்தம்(நிஜ அழுகை இல்லை)
"எவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கொடுமைதான் நடக்குது இங்கே"ஒரு பெருசு புலம்பி தீர்த்தது.

"ஒரு மூன்று நாளாவது அவகாசம் தர வேண்டாமா?திடுப்புன்னு இப்படி அறிவிச்சா நடுத்தர மக்கள் என்ன செய்வாங்க?என்ன பு...ன்ன அரசாங்கமோ??"கம்பளியாய் கத்தரிக்கப்பட்ட ஒரு கிடா மீசை பொறுமி தள்ளியது.

"தமிழ் நாட்டுக்காரன் எல்லாம் பைத்தியக்காரங்க..இப்ப இப்படி ஏத்திப்புட்டு அடுத்த எலக்சனுக்கு ஒரு வருசம் முன்னாடி 20 ருபாயில மூன்று ருபா குறச்சா போதும்...முட்டா பசங்க 17 ருபாய் இன்னும் குறைக்காம போனது அறிவுக்கு எட்டாது..ஏய்ய்ய்...மூனு ருபா குறச்சுட்டாங்கன்னு தம்பட்டம் அடிப்பானுக" பேசும் வார்த்தைகளில் சற்று பிழையுடன் சற்றே விபரமான ஒரு படித்த இளைஜன்.


சரி விசயத்திற்கு வருவோம்...

இதற்கு நான் எந்த கருத்தும் சொல்ல விரும்ப வில்லை...
ஒரு கவிதை வரிகளை நியாபக படுத்த விரும்புகிறேன்..

"குரங்கு கையில் பூமாலை
பைத்தியக்காரன் கையில் குழந்தை
தமிழர்களின் கையில் ஓட்டுக்கான வாக்குச்சீட்டு"

என்னப்பா செய்யமுடியும்?திராவிட கழகம்தான் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என விதிபோல என நீங்கள் மனதில் கூறுவது எனக்கு கேட்கிறது..
இனிமேலாவது சிந்தித்து ஓட்டு போடுங்கள்!
ஓட்டு போட்டுவிட்டு சிந்த்திக்க வேண்டாம்!