வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

காதல்(நோய்க்கு) தோல்விக்கு என்ன தீர்வு??..

Friday, February 08, 2013





"வாறான் வாறான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே"

என்ன உங்களுக்கு புறியலையா?வருகின்ற 14 காதலர் தினம்...

காதலை பற்றி பெருமைபாட நினைக்கும் இளசுகளின் வரிசையில் நானோ கடைசியில் நிற்கிறேன்...

சோ அதனால் ஏற்படும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதுபற்றி  ஒரு அலசல்

இதன் அறிகுறிகள் :

1.நூறு தடவை தலை சீவுவான்...(நல்லா வாட்ச்பண்ணுங்க)..கண்ணாடி பார்க்கும்போது தனுக்குத்தானே ஈ....னு சிரிப்பான்


2.டைட்டானிக் கப்பலுக்கு ஓனர் போல ஏதையோ தொலைத்தமாதுரி எப்புவும் எங்கையோ பார்த்துட்டு இருப்பான்..

3.ஒழுங்கா சாப்பிட மாட்டான்  சோத்துல. புரோட்டாபோட மாவு பிசைவான்

இன்னும் சொன்னா...லோக்கல் ரோமியோ ஜூலியட் என்னை அடிக்க வருவாங்க

விட்டு விடுவோம்...

காதல் தோல்விக்கு என்னதான் தீர்வு?

எதையும் உள்ளதை உள்ள மாதுரி பார்த்தோம் என்றால் பிரச்சனை இல்லை..

உதாரணத்திற்கு...

சகோதரர் பீஜே சொன்னதுபோல் நிலாவை எடுத்துக்குவோம்.

கண் சொல்கிறது நிலா சப்பாத்தி சைசுக்குதான் இருக்கு என்று...

காது சில மூடத்தனமான செய்திகளை இஸ்டத்திற்கு சொல்கிறது..எ.கா;நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்..

ஆனால் மூளையை பாருங்க...

டாய் அப்படி இல்ல...

நீ பூமியிலேருந்து பாக்குற அதான் நிலா சிறியதாக இருக்கிறது....அது பூமியைவிட பெருசு...என உண்மையை கண்டறிய உள்ளதை உள்ளபடி பார்க்கிறது..

என்ன விளங்கிடுச்சா?

சரி காதல் விசயத்திற்கு வருவோம்..

ஒரு மார்க்கட் இருக்கு...ஒரு பொருளைதேடி போகிறோம்..எங்கே தேடியும் அந்த பொருள் கிடைக்கவில்லை..."ஆ..அய்யோ அந்த பொருள் கிடைக்கலையே?நான் என்ன செய்வேன்?இப்படி யாராவது சொல்வாங்களா ?

நீங்களே சொல்லுங்கள்.....

காதலிலும் அப்படித்தான்...அவள்தான் எனக்கு ராணி என்பான்...அவ இல்லாட்டி நான் செத்துவிடுவேன் என பஞ்ச் விடுவான்..கடைசில என்ன ஆகும்?

இரண்டு வருசத்துல எல்லாம் போயிறும்...

சண்டைபோடும்போது சொல்வான்..ஏன்டி ஏன் பாவத்துல வந்து விழுந்தாய் என....

நல்ல மனிதன் என்ன செய்வான்?

அவள் கிடைக்கலையா?பரவாயில்லை...வேற பெண் உலகத்தில் இல்லையா?

அப்படிதானே நினைக்க வேண்டும்!

வைரமுத்துகூட பாருங்க

"முதல் காதல் முற்றிலும் தோல்வியா?
பரவாயில்லை
இன்னொரு காதல் இல்லையா"என்கிறார்

இதுக்குமேல நான் என்ன சொல்லட்டும்?

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

எல்லாம்வல்ல அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்...

சிலபேர் பெருமையா பேசுறதை கேட்டுருக்கிங்களா?
"அவன தயவுசெய்து போக சொல்லு..கோபம் வந்தா எனக்கு கண்மூக்கு தெரியாது..அப்புறம் நான் என்ன செய்வேன் என்றே சொல்லமுடியாது"

எல்லாம் முடிஞ்சி "நானா அப்படி சொன்னேன்?நானா அப்படி செஞ்சேனு ஒரு பஞ்ச் டயலாக்...

இன்னொருவகையில் பார்த்தால் அது அவர்களாக பேசியதோ செய்ததோ இல்லை..விலக்கப்பட்ட சய்த்தானின் தூண்டுதலால் வந்த வினையே ஆகும்

"ஒரு போர்களத்தில் நூறுபேரை கொள்பவன் வீரன் இல்லை...கோபத்தை அடக்கியவனே வீரன்" என பெருமானார்(ஸல்) கூறினார்கள்..

"கோபம் வரும்போது நீங்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் உட்கார வேண்டும்..அப்போதும் அடங்கவில்லையென்றால் படுத்துக்கொள்ளவேண்டும்..அதிலும் பயன் இல்லை என்றால் நீங்கள் ஒலுச்செய்து கொள்ளுங்கள்" என பெருமானர் கூறினார்கள்..

என்னப்பா பெரிய வேடிக்கையா இருக்கு?கோபம் வரும்போது எவனாவது இப்படி செய்வானா என சிலர் மனதுக்குள் பேசுவது எனக்கு கேட்கிறது

இதில் சத்தியமாக ஒரு தீர்வு இருக்கிறது...

அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டுபேர் சண்டைபோடும் போது ...ஒருவரை நின்று கொண்டிருக்கும் நிலையில்"ஏய் பேசாம இருங்கப்பா...சண்டை போடாதிங்கன்னு" சொல்லி பாருங்க

விடுங்கண்ணே அவன ரெண்டுல ஒன்று பார்க்கிறேன் என்பார்...


இதே கொஞ்சம் அமர வைத்து பாருங்கள்....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரு

அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டால் பிரச்சனையே இல்லை..

அதெல்லாம் சரி ஒலுச்செய்ய சொன்ன காரணம் என்னவாக இருக்கும்??

கோபம் சய்த்தானிடமிருந்து வருவது...அவன் நெருப்பினால்  படைக்கப்பட்டவன்...

நெருப்பை அணைக்க நீரினால் முடியும்...

நாம் தண்ணீரிதான் ஒலுச்செய்கிறோம்....

சாதாரண அவர்கள் சொன்ன ஒரு சின்ன விசயத்தில்கூட எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது!

இந்த பதிவின்மேல் களங்கம் ஏற்படுத்த..நீங்கள் கோபபடும் சூழ்நிலையில் கோபம் குறந்தாலும் பதிவை பொய்பிக்க நீங்கள் கோபம் குறையாதவராக நடித்தாலோ அதன்பின் கேள்வி கேட்டாலோ நான் பொறுப்பல்ல....

அல்லாவிற்கே எல்லாப் புகழும்..

உலகத்துக்கே ஒரு சவால்!


 திருக்குர்ஆனின் அறைகூவல்!



அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கின்றேன்....




மனிதர்களின் சவாலுக்கும் கடவுளின் சவாலுக்கும் வித்தியாசம் உண்டு...

நான் மிஞ்சிபோனால் என் ப்ளாக்கில் ஒரேநாளில் 10000 பேரை  கொண்டு வருவேன் என்பது என் சவாலாக இருக்கும்...

நான் ஒரே நாளில் ஹோட்டலில் 5000 ருபாய்க்கு சாப்பிட முடியும் என்பது சாப்பாட்டு ராமனின் சவாலாக இருக்கும்

ஆனால் அல்லாவின் சவாலை பாருங்கள்....




எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

முஹம்மது நபி அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொழியில் மிகவும் விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்


எழுதப் படிக்கத் தெரியாதவர் எதை இறை வேதம் எனக் கொண்டு வந்தாரோ அது அவர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.


எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது தான் கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இது போல் தயாரித்துக் காட்டுங்கள்!'' என்று அறைகூவல் விடப்பட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர் கொள்ளப்படவில்லை.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34)




இதை நம்ம பாஷையில் சொல்வதென்றால்...

"எமது தூதரையும் இந்த வேதத்தையும் நீங்கள் நம்பவில்லையா?
உங்கள் அத்தனை பேருக்கும் சவால்விடுகிறேன்.

உன்னால் முடிந்தால் இதுபோன்ற ஒரே ஒரு அத்தியாயத்தையாவது இதுபோன்ற நடையில் இயற்றிப்பார்!

உனக்குதுணையாக ஜின்களையும்,சில மனிதர்களையும்..இன்னும் நீ யாரைவேண்டுமானாலும் துணைக்கு அழைத்துக்கொள்!இதுபோன்ற அத்தியாயம் உங்களால் இயற்றவே முடியாது!"




கடவுள் இல்லையென சொல்லும் அறிவு ஜீவிகளும்...குரான் இறைவேதம் இல்லையென சொல்லும் மனிதமேதாவிகளும் இதை முயற்சி செய்து பாருங்கள்.