திருக்குர்ஆனின் அறைகூவல்!

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கின்றேன்....
மனிதர்களின் சவாலுக்கும் கடவுளின் சவாலுக்கும் வித்தியாசம் உண்டு...
நான் மிஞ்சிபோனால் என் ப்ளாக்கில் ஒரேநாளில் 10000 பேரை கொண்டு வருவேன் என்பது என் சவாலாக இருக்கும்...
நான் ஒரே நாளில் ஹோட்டலில் 5000 ருபாய்க்கு சாப்பிட முடியும் என்பது சாப்பாட்டு ராமனின் சவாலாக இருக்கும்
ஆனால் அல்லாவின் சவாலை பாருங்கள்....
எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.
முஹம்மது நபி அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொழியில் மிகவும் விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்
எழுதப் படிக்கத் தெரியாதவர் எதை இறை வேதம் எனக் கொண்டு வந்தாரோ அது அவர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.
எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது தான் கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இது போல் தயாரித்துக் காட்டுங்கள்!'' என்று அறைகூவல் விடப்பட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர் கொள்ளப்படவில்லை.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34)
இதை நம்ம பாஷையில் சொல்வதென்றால்...
"எமது தூதரையும் இந்த வேதத்தையும் நீங்கள் நம்பவில்லையா?
உங்கள் அத்தனை பேருக்கும் சவால்விடுகிறேன்.
உன்னால் முடிந்தால் இதுபோன்ற ஒரே ஒரு அத்தியாயத்தையாவது இதுபோன்ற நடையில் இயற்றிப்பார்!
உனக்குதுணையாக ஜின்களையும்,சில மனிதர்களையும்..இன்னும் நீ யாரைவேண்டுமானாலும் துணைக்கு அழைத்துக்கொள்!இதுபோன்ற அத்தியாயம் உங்களால் இயற்றவே முடியாது!"
கடவுள் இல்லையென சொல்லும் அறிவு ஜீவிகளும்...குரான் இறைவேதம் இல்லையென சொல்லும் மனிதமேதாவிகளும் இதை முயற்சி செய்து பாருங்கள்.
Tweet | ||||||
22 பேர் சொன்னது....:
முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே!
புள்ள குட்டிங்கள படிக்க வைங்க முதல்ல.
//கடவுள் இல்லையென சொல்லும் அறிவு ஜீவிகளும்...குரான் இறைவேதம் இல்லையென சொல்லும் மனிதமேதாவிகளும் இதை முயற்சி செய்து பாருங்கள்.//
he he. comedy.
You must be having lots and lots of time in your hand.
Vaalkaiyil munnera paarungal.
//புள்ள குட்டிங்கள படிக்க வைங்க முதல்ல.//
Good advice. This is the one to be followed first.
If you do this, your Muslim society will improve.
Rest are all illusions.
நன்றி ஏ டூ இஸட் டாட்.காம்...
நீங்களாவது அதை உதாசீனபடுத்தாமல் முயற்சி செய்கிறேன் என்று சொன்னீர்களே(அதில் கண்டிப்பாக தோல்விதான் என்பது இரண்டாவது விஷயம்)
நன்றி சகோதரா!
நன்றி விஜய் சார்!
நன்றி எதுக்கெல்லாம் தெரியுமா?என் ப்ளாக்கிற்கு வருகை தந்தமைக்கும்,என் குழந்தைகள் மேல் கொண்ட அக்கறைக்கும்...
வீரத்தமிழ் மகனே வணக்கம்!வந்தனம்!
//he he. comedy.
You must be having lots and lots of time in your hand.
Vaalkaiyil munnera paarungal.///
நான் பொழுதை போக்குவதற்காக மட்டும் ப்ளாக் தொடங்கவில்லை..இது காமடி என்றால் மற்ற வேதங்கள் எல்லாம் என்ன?
ஒரு நல்ல வேலையில் சேர்ந்து நல்ல நிலையில் இருக்கும்போதுதான் இந்த பதிவை போட்டிருக்கிறேன்...
இந்த பதிவின் நோக்கம் இறை நிராகாரிப்பாளர்கள் இறைவன்பக்கம் வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே தவிர....கடவுளோடு போட்டி போட இல்லை(அதெல்லாம் கனவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட காரியம்)
//Good advice. This is the one to be followed first.
If you do this, your Muslim society will improve.
Rest are all illusions.///
அல்ஹம்துலில்லாஹ்..அல்லாவின் கிருபையாலும் பேரருளாலும் படித்துக்கொண்டுதான் இருக்காங்க...
படித்துவிட்டால் சமுதாயம் முன்னேறி விட்டது என அர்த்தமா?படிக்காத மேதைகளும் படித்த முட்டாள்களும் நாட்டில் அதிகம் உண்டே சகோதரா!
இல்லூஷன் இல்லை...உண்மை....அதனால்தான் அதை செய்ய முடியாமல் குறை கண்டுபிடிக்க நிறைய விசயங்கள் பேசுகிறார்களே தவிர ஆமோதிக்க ஆளை காணோம்...
நூறு வருடங்களுக்கு மேல் திருத்தி எழுதப்பட்டு ..உத்மான்(மனிதர்களால் ) போன்றவர்களால் இறுதி செய்யப்பட்டது என்பதை ஒப்பு கொள்பவன் அறிவாளி ..
சகோதரர் திலீப்குமார்
வருகைக்கு நன்றி!நூறு வருடங்களுக்கு மேல் அது திருத்தி எழுதப்படவில்லை...யார் சொன்னது?
அது 1400 வருடங்களுக்கு முபாக எப்படி இருந்ததோ அதை போன்றுதான் இப்போதும் இருக்கிறது...அதன் மூலப்பிரதி இன்னும் இரண்டு இடங்களில் பாதுகாப்பட்டு வருகிறது...
மற்ற வேதங்களுக்கு இந்த சிறப்பு இல்லை....அதை என்னால் நீருபிக்க முடியும் இன்ஷா அல்லாஹ்
நன்றி !!!
வரலாறு சொல்வது அதுவே ....நீங்கள் குறிப்பிட 2 இடங்களில் உள்ள புனித நூல் ..உத்மான் இபின் அபாஅன் அவர்களால் இறுதி செய்யப்பட்டது ஆகும் ...அதற்க்கு முன்பு இருந்த அணைத்து பதிப்புகளும் தீ இட்டு எரிக்க பட்டன .உத்மான் அவர்கள் கடைசி கலீபா ஆவார்கள் .
புனிதர்(puh ) அவர்கள் விண்ணுலகம் சென்ற பின்பு ...அவர்கள் துணைவி ஆய்ஷா (puh) அவர்களின் 40 ஆண்டுகால வாழ்வில் பலவசனங்கள் வசனங்கள் சேர்க்கப்பட்டன ..பின்பு பல வருடங்கள் கலீபா களால் திருத்தப்பட்டு நீங்கள் சொல்லும் இறுதி புனித நூல் இன்றும் காக்கப்பட்டு வருகிறது ...இந்திய பெரியவர்களால் எழுதப்பட்ட ஆதாரங்கள் நம்பும் படி இருக்காது. உலக அளவில் நிரூபிக்க பட்ட ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள் ..என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன் ....
உங்கள் புனித நூலை அல்லது வேதத்தை நீங்களே சிறுமைப் படுத்துவதாகத்தான் தோன்றுகிறது. தெரிந்து செய்யவில்லை. தெரியாமல் செய்திருக்கிறீர்கள்.
இலக்கியம் மனிதர்களில் சுக போகங்களுக்கு. கலைகள் அனைத்தும் அப்படியே. எழுத்தும் ஒரு ஆதிகலை. இலக்கியவாதிகள் பலதரப்புக்களில் இருந்தும் தாமறிந்தவற்றை எழுத்தோவியங்களாக அல்லது காவியங்களாகப் படைக்கிறார்கள். அவர்களின் தனிநபர் வாழ்க்கை பெரும்பாலும் அசிங்கமாக இருக்கும். கலைக்கு தனிமனித ஒழுக்கம் தேவையில்லாததால் அவர்கள் படைப்பாளிகளாகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தவை அல்லது மனிதர்களுக்குத் தெரிந்தவை ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே நெளியும். அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்படுவதில்லை. சுவையாக இருக்கின்றதா என்ற போக அளவு மட்டும் போதும்.
இப்படிப்பட்ட மனிதர்களின் படைப்பும் அல்லாவோ அருளியதாகச் சொல்லப்படும் உங்கள் புனித நூலையும் ஒன்றாக பார்க்கவியலுமா? அஃதொரு இலக்கியமா? அஃது எங்கோ உயரத்தில் இருக்க, மனித போகத்துக்குப் படைக்கப்பட்ட இலக்கியம் (காமசூத்திராவும் இலக்கியம் என்றறிக) எங்கோ கீழ் அதாவது மனித வாழ்க்கையின் சுகபோகத்துக்காக மட்டும் இருக்க, அல்லது அசிங்கமான மனிதர்கள் படைக்கும் இலக்கியங்களையும் அப்பழுக்கில்லா மாசில்லா இறைத்தூதருக்கு அருளியது: இப்படிப்ட்ட வெவ்வேறு செயல்களை அல்லது பொருட்களை எப்படி இணைத்துப்பேச உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது?
தயவு செய்து சிந்தியுங்கள்.
//புனிதர்(puh ) அவர்கள் விண்ணுலகம் சென்ற பின்பு ...அவர்கள் துணைவி ஆய்ஷா (puh) அவர்களின் 40 ஆண்டுகால வாழ்வில் பலவசனங்கள் வசனங்கள் சேர்க்கப்பட்டன ..பின்பு பல வருடங்கள் கலீபா களால் திருத்தப்பட்டு நீங்கள் சொல்லும் இறுதி புனித நூல் இன்றும் காக்கப்பட்டு வருகிறது ...இந்திய பெரியவர்களால் எழுதப்பட்ட ஆதாரங்கள் நம்பும் படி இருக்காது. உலக அளவில் நிரூபிக்க பட்ட ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள் ..என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன் ....//
நன்றி திலீப்குமார் ஜீ!
நபிகள் நாயகம் விண்ணுலகம் சென்ற பின்பு என நீங்கள் குறிப்பிட்டது மிராஜ் எனும் விண்வெளிப்பயணத்தைதானே?
குரான் இறக்கப்பட்ட காலம் நபிகள் நாயகத்தின் கடைசி 23 வருட காலத்தில்தான்...
அது இந்திய அறிஞர்களால் இயற்றப்பட்ட அல்லது திருத்தப்பட்ட வேதம் இல்லை...
1 பெருவெடிப்புக் கொள்கை
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
திருக்குர்ஆன் 21:30
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன. திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்தத் தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். 'விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். 'விரும்பியே கட்டுப்பட்டோம்' என்று அவை கூறின.
கருவில் குழந்தையின் வளர்ச்சி.....
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
திருக்குர்ஆன் 23:14
இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.
இதைத் தான் 'பின்னர் வேறு படைப்பாக மாற்றினோம்' என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 76:2
மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
துளி' என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.
மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை நிரூபிக்கிறது.
விந்தின் பிறப்பிடம்....
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிருந்து வெளிப்படுகிறது.
திருக்குர்ஆன் 86:5,6,7
சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும், முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டு பிடித்தனர்.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.
சகோதரர் திலீப்குமார்!
இப்போது சொல்லுங்கள் மேலே கூறியவைகள் உலகளவில் நீருபிக்கபட்ட ஆதாரங்களே!இதை இந்திய அறிஞர்களால் எழுதியிருக்க முடியுமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்!
//இப்படிப்பட்ட மனிதர்களின் படைப்பும் அல்லாவோ அருளியதாகச் சொல்லப்படும் உங்கள் புனித நூலையும் ஒன்றாக பார்க்கவியலுமா? அஃதொரு இலக்கியமா? அஃது எங்கோ உயரத்தில் இருக்க, மனித போகத்துக்குப் படைக்கப்பட்ட இலக்கியம் (காமசூத்திராவும் இலக்கியம் என்றறிக) எங்கோ கீழ் அதாவது மனித வாழ்க்கையின் சுகபோகத்துக்காக மட்டும் இருக்க, அல்லது அசிங்கமான மனிதர்கள் படைக்கும் இலக்கியங்களையும் அப்பழுக்கில்லா மாசில்லா இறைத்தூதருக்கு அருளியது: இப்படிப்ட்ட வெவ்வேறு செயல்களை அல்லது பொருட்களை எப்படி இணைத்துப்பேச உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது? //
டியர் அனானிமஸ்!
இதுபோன்ற ஒரு இலக்கியத்தை கொண்டுவரமுடியுமா என குரான் கடைசியில் கேட்கவில்லை...ஒரே ஒரு அத்தியாயத்தையாவது இயற்ற முடியுமா என சவால் விட்டது..அது ஒரு சிறந்த இலக்கியம் என அறைகூவல் விட அல்ல....மாறாக மனிதர்கள் படிப்பினை பெற இறக்கப்பட்ட வசனமாகும்
மேலே கூறிய அறிவியல் வசனங்களை காண்க...அறிவியல் வசனங்களை பேசுவதால் எப்படி உங்களால் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் அல்லாவிற்கும் முடிச்சி போட முடிந்தது என கேட்பீர்கள் போலும்..
கொசு, சிலந்தி ,எறும்பு,
குர்ஆனில் அல்லாஹ் கூறும் சில அதிசயங்களைப் பாருங்கள்!
அற்பமான பொருளையும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான் என மக்கத்துக் காபிர்கள் கேலி சய்தபோது சிலந்திபற்றிய வசனம் இறங்கியது
أن هذا المخلوق صغير في حجمه عظيم في خلقه
واغرب ما في هذا كله أن العلم الحديث اكتشف أن فوق ظهر البعوضة تعيش حشرة صغيرة جداً لا تُرى الا بالعين المجهرية وهذا مصداق لقوله تعالى : )
نَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا.
கொசு
1. அது பெண்பால்
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்;ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாதவாறு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை
மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சி குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்துதெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால்பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றையஅறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதைவிட மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான் (அலபகரா :2:26)
டியர் அனானிமஸ்!
குரானையும் மனித இலக்கியத்தையும் நான் ஒப்பிட்டு பார்க்க சொல்லவில்லை...
இலக்கியத்தை இயற்றும் மனிதர்கள் அல்லது இயற்றாத மனிதர்களுக்கு அவர்கள் இந்த வேதத்தில் சந்தேகம் கொண்டால் இதுபோன்ற ஒரு அத்தியாயத்தை கொண்டு வர சொல்கிறது...
//இப்படிப்பட்ட மனிதர்களின் படைப்பும் அல்லாவோ அருளியதாகச் சொல்லப்படும் உங்கள் புனித நூலையும் ஒன்றாக பார்க்கவியலுமா? //
கண்டிப்பாக முடியாது....அப்படி அந்த வேதத்தை நம்பாதவர்களுக்குத்தான் மேலே கூறிய வசனம் பொருந்தும்
//(காமசூத்திராவும் இலக்கியம் என்றறிக) எங்கோ கீழ் அதாவது மனித வாழ்க்கையின் சுகபோகத்துக்காக மட்டும் இருக்க, அல்லது அசிங்கமான மனிதர்கள் படைக்கும் இலக்கியங்களையும் அப்பழுக்கில்லா மாசில்லா இறைத்தூதருக்கு அருளியது: இப்படிப்ட்ட வெவ்வேறு செயல்களை அல்லது பொருட்களை எப்படி இணைத்துப்பேச உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது? //
அப்போ இலக்கியவாதிகள் அனைவரும் அயோகியர்கள்னு சொல்ல வருகிறீர்களா?உங்கள் கண்களுக்கு காமசூத்ரா மட்டும் இலக்கியமாக தோன்றுகிறது...அதனால்தான் இராமாயணம்,மகாபாரதம் எல்லாம் மறந்து "மனிதர்கள் இயற்றும் அசிங்கமான இலக்கியங்கள் என குறிப்பிடுகிறீர்கள்.
எந்த பொருளையும் நான் மாற்றி சொல்லவில்லை...உங்களைபோல் சுற்றி வளைக்காமல் நேரிடையாக விசயங்களை சொல்லிவிட்டேன்...அதனால்தான் என்னவோ உங்கள் முகவரியை என் முதுகிற்கு பின்னே எழுதிவிட்டு சென்றீர்கள்!
சகோ ,
நான் நம்பிக்கை பற்றி பேச வில்லை .... புனித நூல் 100 சதவீதம் புனிதரால் (puh ) இறக்க பட்டது அல்ல ....ஒரு நூற்றாண்டு அதில் பல்வேறு அரசியல் மற்றும் மத காரணங்களுகாக பல மாற்றங்கள் சேர்க்க பட்டுள்ளன என்பதே என் வாதம் .....
1400 ஆண்டுகள் என்பது பெரிய இடைவெளி இல்லை சகோ .... 3000 ஆண்டு பழமை ஆன வேதங்களில்.. ஆயுர்வேதம் ,மூளை அறுவை சிகிச்சை அளவுக்கு அறிவை கொண்டுள்ளது..
சவூதிக்கு மிக அருகில் உள்ள எகிப்து மற்றும் கிரேக்க நாடுகளில் இது போன்ற மருத்துவம் வான சாஸ்திரம் பற்றிய அறிவுள்ள மக்கள் வாழ்ந்தார்கள் ... ஒரு வேலை அங்கு இருந்து சவூதிக்கு அந்த அறிவு சென்று இருக்கலாம் ..
பைபிள் ,மற்றும் உங்கள் புனித நூல் இரண்டுமே , மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலுக்கா க ...பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்துள்ளது என்பதே வரலாறு ..
நீங்கள் மத ரீதியாக யோசிகிறீர்கள் ..நான் வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் .
தவறாக நினைக்க வேண்டாம்.
///// **சகோதரர் திலீப்குமார்!
இப்போது சொல்லுங்கள் மேலே கூறியவைகள் உலகளவில் நீருபிக்கபட்ட ஆதாரங்களே!இதை இந்திய அறிஞர்களால் எழுதியிருக்க முடியுமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்!///////****
புனித நூல் புனிதருக்கு (puh ) பிறகு வந்த கலீபா களால் மாற்றம் செய்ய பட்டது என்றே கூறுகிறேன் ....
புனித நூல் மற்றம் செய்ய படவே இல்லை என்று ..இந்திய அறிஞர்கள் கூறும் ஆதாரம் வேண்டாம் என்றே கூறினேன்.
சகோதரா தீலீப்குமார்
உஸ்மான் காலத்தில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஒன்று இஸ்தான்புல்லிலும், மற்றொன்று தாஸ்கண்டிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முகம்மது(ஸல்)அவர்களின் காலத்திலேயே இறைவனிடமிருந்து வஹி வர அவர் அதை மனனம்செய்து தன் சகதோழர்களுக்கு சொல்லும்போது அவர்கள் அதை மிருகத்தோல்களிலும்,இலைகளிலும் எழுதி பாதுகாக்க ஆரம்பித்தார்கள்..அதனைமட்டுமே ரஸூலின் மறைவிற்கு பின் குரான் புத்தகவடிவில் தொகுக்கப்பட்டது...
அதனுடைய பிரதிகள்தான் மேலே குறிப்பிட்ட இரண்டு...
எந்த குரானை நீங்கள் பார்த்தாலும் ஒரே மதுரிதான் இருக்கும்..அதில் நிச்சயமாக இடைசொறுகல்கள் இல்லை
"யாராலும் இதுபோல் இயற்ற முடியாது எனும் சவால் மனிதர்களாகிய எல்லாருக்குமே....நீங்கள் சொல்வதுபோல் இல்லை..ஏனெனில் கலீபாக்களும் மனிதர்களே!
முகம்மது (ஸல்)அவர்களுக்கு வழங்கப்பட்டதை கலீபாக்கள் மாற்றினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
Post a Comment