
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
எல்லாம்வல்ல அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்...
சிலபேர் பெருமையா பேசுறதை கேட்டுருக்கிங்களா?
"அவன தயவுசெய்து போக சொல்லு..கோபம் வந்தா எனக்கு கண்மூக்கு தெரியாது..அப்புறம் நான் என்ன செய்வேன் என்றே சொல்லமுடியாது"
எல்லாம் முடிஞ்சி "நானா அப்படி சொன்னேன்?நானா அப்படி செஞ்சேனு ஒரு பஞ்ச் டயலாக்...
இன்னொருவகையில் பார்த்தால் அது அவர்களாக பேசியதோ செய்ததோ இல்லை..விலக்கப்பட்ட சய்த்தானின் தூண்டுதலால் வந்த வினையே ஆகும்
"ஒரு போர்களத்தில் நூறுபேரை கொள்பவன் வீரன் இல்லை...கோபத்தை அடக்கியவனே வீரன்" என பெருமானார்(ஸல்) கூறினார்கள்..
"கோபம் வரும்போது நீங்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் உட்கார வேண்டும்..அப்போதும் அடங்கவில்லையென்றால் படுத்துக்கொள்ளவேண்டும்..அதிலும் பயன் இல்லை என்றால் நீங்கள் ஒலுச்செய்து கொள்ளுங்கள்" என பெருமானர் கூறினார்கள்..
என்னப்பா பெரிய வேடிக்கையா இருக்கு?கோபம் வரும்போது எவனாவது இப்படி செய்வானா என சிலர் மனதுக்குள் பேசுவது எனக்கு கேட்கிறது
இதில் சத்தியமாக ஒரு தீர்வு இருக்கிறது...
அல்ஹம்துலில்லாஹ்...
இரண்டுபேர் சண்டைபோடும் போது ...ஒருவரை நின்று கொண்டிருக்கும் நிலையில்"ஏய் பேசாம இருங்கப்பா...சண்டை போடாதிங்கன்னு" சொல்லி பாருங்க
விடுங்கண்ணே அவன ரெண்டுல ஒன்று பார்க்கிறேன் என்பார்...
இதே கொஞ்சம் அமர வைத்து பாருங்கள்....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரு
அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டால் பிரச்சனையே இல்லை..
அதெல்லாம் சரி ஒலுச்செய்ய சொன்ன காரணம் என்னவாக இருக்கும்??
கோபம் சய்த்தானிடமிருந்து வருவது...அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன்...
நெருப்பை அணைக்க நீரினால் முடியும்...
நாம் தண்ணீரிதான் ஒலுச்செய்கிறோம்....
சாதாரண அவர்கள் சொன்ன ஒரு சின்ன விசயத்தில்கூட எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது!
இந்த பதிவின்மேல் களங்கம் ஏற்படுத்த..நீங்கள் கோபபடும் சூழ்நிலையில் கோபம் குறந்தாலும் பதிவை பொய்பிக்க நீங்கள் கோபம் குறையாதவராக நடித்தாலோ அதன்பின் கேள்வி கேட்டாலோ நான் பொறுப்பல்ல....
அல்லாவிற்கே எல்லாப் புகழும்..
Tweet | ||||||
0 பேர் சொன்னது....:
Post a Comment