வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

நாத்தீகர்கர்கள் அறிவாளிகளா?

Thursday, August 08, 2013

திரு.தங்கமணி அவர்களின் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ” என்ற பதிவில் “உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது” என்ற வாசகத்தைக் காண நேர்ந்தது.

கடவுள் நம்பிக்கையற்றவர்களை அறிவாளிகள் என்று விளித்திருப்பதன் மூலம் அதன் எதிர் நிலை நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்ப்பதமாக சொல்லப் பட்டதாகக்கொண்டு, கடவுள் நம்பிக்கைக்கும் அதனை மறுப்பதற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்திக் கொள்ளவும், நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகள் என்ற கூற்று சரிதானா? என்றும் பார்ப்போம்.

வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தோமேயானால் மனிதன் அறியாமையால் இறை நம்பிக்கையில் குறைந்திருந்த காலங்களும் பிறகு ஆன்மீகத்தில் திளைத்து இறை நம்பிக்கையில் மிகைத்திருந்த காலங்களும் மாறிமாறியே இருந்து வந்துள்ளன. மனித இனம் தோன்றியது முதல் ஏதாவது ஒரு நம்பிக்கையில் திளைத்து வந்ததாகவே அறியப்படுகிறது. ஒருபோதும் இறைநம்பிக்கை முற்றிலும் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை.

உலகில் அறிவாளிகள் என்று அறியப்படுபவர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு நம்பிக்கையை பின்பற்றியே வந்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் மிகச் சிறுபான்மையினராகவே இருந்து வருகிறார்கள். அறிவாளிகளை, கடவுள் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் என்று வகைப்படுத்தாலமே தவிர கடவுள் நம்பிக்கையற்றவர்களை முற்றிலும் அறிவாளிகளாகவும், அதன் எதிர்நிலையிலுள்ள நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்நிலையிலும் ஒப்பிடக் கூடாது.

கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள், தமது கடவுள் நம்பிக்கை மறுப்பிற்கு அடிப்படையாக அறிவியலைச் சொல்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை, 1) ஆய்வுகளினாலும் சோதனைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை. 2) யூகங்கள், அனுமானங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆனால் நிரூபணமாகாதவை (கோட்பாடுகள்) 3) சோதனைச்சாலை ஆய்வுகளாலும் கோட்பாடுகளாலும் திண்ணமாக வரையறுக்க/நிரூபிக்க இயலாத நம்பிக்கை சார்ந்தவை என வகைப்படுத்தலாம்.

நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்படாதவை நம்பிக்கைச் சார்ந்தவையில் அடங்கும். அந்த நம்பிக்கை சார்ந்தவை, அறிவியல் நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக இல்லாதவரை முற்றிலும் நிராகரிக்கப்படக் கூடியவை அல்ல! அந்தவகையில்தான் இறைநம்பிக்கையும் சாரும். நம்பிக்கைக்களை உண்மையானவை அல்லது உண்மையல்லவை என்று நிரூபிப்பதற்கான ஆய்வுகளின் தொடர்ச்சியே அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியாக இருக்கிறது.

பூமி தட்டையானது என்று நம்பப்பட்ட ஒரு கொள்கை ஆய்வுகளின் மூலம் “உருண்டை” என்ற கண்டுபிடிப்பால் தவறென நிரூபிக்கப்பட்டது. நிலவிலும் பிற கோள்களிலும் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பது, ஆய்வு நிலையிலேயே இருக்கும் கோட்பாடுகள். இறைநம்பிக்கை என்பது கோட்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டது. இறைநம்பிக்கையை எந்த அறிவியல் ஆய்வுகளாலும் நிரூபிக்க முடியாது. அறிவியலால் நிரூபிக்க முடியாதவற்றை நிராகரிப்பதைவிட நிரூபணமாகும்வரை தொடர் ஆய்வுக்குட்படுத்துவதே அறிவுப் பூர்வமான செயலாகும். இறை நம்பிக்கைக்கு எதிர்நிலை என்பது இறைநம்பிக்கை இன்மைதானே தவிர முற்றிலும் இறைநம்பிக்கையை மறுப்பதன்று!

உதாரணமாக, பேரூந்து