வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

துபாயில் வேட்டிக்குத் தடையா?

Thursday, December 29, 2011



துபாய் மற்றும்பிற ஐக்கிய அரபு அமீரகங்களில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் மலையாளிகளும் மாற்றுக்கு அணியும் வேட்டிக்கு தடை விதித்திருப்பதாகவும், பொது இடங்களில் வேட்டியணிந்து சென்றால் அபராதம் விதிக்கபடுவதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். இதுகுறித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
கடந்த நவம்பர்-3 ஆம் தேதியிட்ட கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, அல்-கூஸ் என்ற துபாயின் புறநகர் பகுதியில் இருக்கும் “BOLLYWOOD CINEMA” என்ற திரையரங்கில் லுங்கியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதாகச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
காரணம், அந்த தியேட்டருக்கு சினிமா பார்க்கவந்த சில தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு லுங்கியுடன் வருபவர்களால் சங்கடம் ஏற்படுவதாக தியேட்டர் உரிமையாளரிடம் புகார் கொடுத்ததையடுத்து, இத்தகைய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து வேட்டி/லுங்கிக்கு அந்த தியேட்டரில் மட்டுமே அனுமதியில்லை என்றே அறியலாம்.
மேலும், லுங்கி அல்லது வேட்டி என்று அறியப்படும் உடையை தென்னிந்தியர்கள் மட்டுமின்றி ஏமன்,இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சார்ந்த மக்களும் அமீரகத்தின் அரபுக்களும் அணிகின்றனர். அரபுக்கள் தங்களது தேசிய உடையாகிய கந்தூராவை குதிகால்வரை மூடும்படி அணிவதால் உள்ளே அணிந்திருக்கும் வேட்டி வெளியே தெரிவதில்லை.
அந்த குறிப்பிட்ட செய்தியில் பின்னூட்டமிட்டுள்ளவர்களில் சில வேட்டியை ஆபாச உடை என்று குறிப்பிட்டிருந்தது அவர்களின் அறியாமை மட்டுமின்றி துபாயில் பணியாற்றும் 180 நாடுகளிலிருந்து வந்துள்ளவர்களில் குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கத்திய நாட்டு ஆண்களும் பெண்களும் தொடை தெரியுமளவுக்கு அரைக்கால் சட்டை (Shorts/Bermuda) போன்றவற்றையும் இன்னும் சிலர் SEE THROUGH என்று சொல்லப்படும் உள்ளாடை தெரியும்படியான மெல்லிய உடைகளையும் உடுத்திக்கொண்டு பொதுவெளிகளில் வெட்கமின்றி திரிகின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாதோ என்னவோ?
கல்ஃப் நியூஸில் வெளியான அந்த செய்திக்கு நானிட்ட பின்னூட்டம். நீங்களும் வேட்டி ஓர் ஆபாச உடையல்ல என்று கருதினால் உங்கள் கருத்தை பதியுங்கள்.
I am surprised to read this funny article.If that particular theater manager is uncomfortable to see the fans with lungi, what he would do if actors wearing such dress in the movies? It is true that un-stitched or open type lungi is sometimes exposing thigh, the same is applicable for shorts too.Lungi is not only south Indian dress,it is also worn by Yemenis ,Malaysian & Indonesians and so on…
Since considerable amount of community not feel lungi is indecent dress, the so called western minded people should try to recognize the human value and freedom. Otherwise it is simply called racism.Moreover, Dubai is a land of multicultural and tolerate nation. Mind it!
கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிப்போனவர்களுக்கு ஆபாசம் எது? என்று சரியாகத் தெரியவில்லை. நியாயமான உங்கள் கருத்துக்கள் அத்தகையோரின் அகக்கண்களை திறந்தால் தெளிவுபெறக்கூடும். அதற்கான சுட்டி:http://gulfnews.com/news/gulf/uae/general/indecent-exposure-lungi-ban-at-cinema-1.923250
குறிப்பு: மலையாளிகளில் சிலர் அணியும் முன்பக்கம் மூடாத கைலி பலசமயம் ஆபாசமாக தெரியும். அமீரக தமிழர் அமைப்பு போன்ற சங்கங்களின் கலாச்சார விழாக்களுக்கு வெள்ளை வேஷ்டி, சட்டையுடனே கலந்து கொள்கிறார்கள்.
அமீரகவாழ் சகோதரர்களில் எவருக்கேனும் வேட்டி அணிந்து சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ளவும். உரிய ஆதாரங்களுடன் மடலிட்டால் துபாய்-இந்திய தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் “சமயம் மற்றும் கலாச்சார” (AWQAF) மையத்தில் உரியவர்களை அணுகி ஆபாசமற்ற நமது உடையுடுத்தும் உரிமைக்காக முயற்சிக்கலாம்.

தடங்களுக்கு வருந்துகிறோம்!

Saturday, December 24, 2011



முகம்மது,புத்தர்,இயேசு
மூவரும் வருகை தந்தனர் பூமிக்கு...

புத்தரே!
அமைதி தேடி காட்டுக்கு சென்றீர்!

இப்போது நாடே காடாகி விட்டது!

இயேசுவே!
ஒரு கன்னம் காட்டினாலே முகத்தில்
வறப்பு வெட்டும் இந்த காலத்தில்
இன்னோரு கன்னமா?

முகம்மதே!
சாந்தியும் சமாதானமும் என்றீர்!
இங்கே உண்டாகி கொண்டிருப்பது
ஜாதியும் சமாதியும்!
இங்கே இருக்கும் ஜாதிகளின் எண்ணிக்கையை
விஜயகாந்த் போல
விபரமாக சொல்வதென்றால் மூவாயிரம் பக்கம்
வேண்டும் எனக்கு..


மூவரும்
முன் வைத்ததுதான் என்ன?

சமாதானுமும் சாந்தியுமா?
சுடுகாட்டில்தான் இப்போது காணலாம்...

சகோதரத்துவமா?
சும்மா பேச்சுக்குத்தான்..

மனிதாபிமானம்?
அதுவும் இப்போது விற்பனையில்தான்
கிடைக்கிறது!

ஒற்றுமை?
இப்போதைக்கு காகத்திடம் மட்டுமே உண்டு!



மூவரும் அவசரமாய்கூடி
ஒரு முடிவுக்கு வந்தனர்...

தடங்களுக்கு வருந்துகிறோம்!
தவறுதலாய் பூமியென நினைத்து
தரையிரங்கிவிட்டோம்

யானைக்கும் அணைக்கும் மதம்

Tuesday, December 20, 2011


கங்கை யமுனை என
வெவ்வேறு பெயர் ஆனாலும்
நீரின் குணம் ஒன்று!

தமிழ் ஹிந்தி அரபு
என வெவ்வேறு மொழிகள்..
ஆனாலும் நாவு என்பது ஒன்றுதான்!

நதிகள் வேறுவேறு பாதையில் வந்தாலும்
ஒன்று சேரும் இடம் ஒன்றுதான்!

ஆனால் மனிதர்கள் சேரும்
இடம் எது??

ஆக தண்ணீருக்கு இருக்கும் ஒற்றுமை
தனி மனிதன் எவருக்குமில்லை
என்னையும் சேர்த்து...

ஐம்பூதங்கள் அனைவருக்கும்
சொந்தம் தானே!

ஆனால் எந்த மனிதனாவது
இந்த நெருப்பிலும் ஆகாயத்திலும் எனக்கு
பங்கு உண்டென
பறைசாற்றியதுண்டா?

முன்பெல்லாம் மனை பிரச்சனை
இப்போது அணை பிரச்சனை..

ஓஹோ..
யானைக்கும் அணைக்கும்
மதம் பிடித்துவிட்டதோ??





என் பழைய சினேகிதி....

Saturday, December 17, 2011


நட்பு எனும் ஒற்றையடிப்பாதையில்
சேர்ந்தே நடந்தோம் நாமிருவரும்..

சற்று திரும்பி பார்க்கிறேன் தூரத்தில்
சிறு புள்ளியாய் நீ!

நம்மிருவருக்கிடையில் உள்ள தூரம்
நம் ஏக்கத்தின் நீளம்!

என்ன ஆயிற்று?
ஆண் பெண் நட்பு கூடாதென
அரசாங்கம் அறிவித்துவிட்டதா?

பல வருசங்களாய் சேமித்த நட்பை
ஒரே நொடியில் செலவு செய்து விட்டோமா?

உலகத்தில் எல்லாமே எதிர்மறைகள்தான்

இரவு பகல்,துன்பம் ஆனந்தம்
கருப்பு வெள்ளை..

நீ..நான்...!

நம் இருவருக்கும் இடையில்
நாகரீகத்தை அமர்த்தி நாம்
பேசிக்கொண்டதையும்...

இருதயம் நானாகவும்
இரைப்பை நீயாகவும் வெறுபாடு கொண்டிருந்தாலும்
நமக்காக நம்மை
இரையாக்கி கொள்ளாமல் இருந்ததையும்..

உனக்கும் சேர்த்து என் இதயமும்
நானும் துடித்துக் கொண்டதையும்..

என்னால் மறக்கமுடியவில்லை
சகோதரி!

இந்த கிளையில் எத்தனையோ
பறவைகள் அமர்ந்து போனாலும்..
அமர்ந்த வேகத்தில் தடம் பதித்தது
நீதானே தோழி!

உன்னை மறக்க நினைப்பதை
மறந்து போகிறேன்
நினைப்பதில்
நினைவு தப்பாதிருக்கிறேன்!

என் நினைவிலிருந்து உன்னையோ
உன் நினைவுகளிலிருந்து என்னையோ
என்னால் தள்ள முடியவில்லை

ஏனெனில்
நீயிருப்பது என் நினைவெனும்
சிகரத்தின் உச்சியில்!

உன்னை என் மனதிலிருந்து
பொறுக்கியெடுக்கும் கைகள்
எனக்கில்லை!


தாழ்வு மனப்பான்மை

Monday, December 05, 2011


தாழ்வு மனப்பான்மை
மூளையில் சுற்றிய களை

தாழ்வுமனப்பான்மை
தடை கல்

அது ஒப்பிடுவதால் ஏற்படும்
விபத்து!

விதைக்கு தாழ்வு மனப்பான்மையெனில்
விருட்சமாவது எப்போது?

நயாகராகூட
கீழே விழுந்து போகும்போது
தாழ்ந்துதான் போகும்

மழை மட்டும் என்னவாம்?

ஆனால் மழைக்கும் நயாகராவுக்கும்
தாழ்வு மனப்பான்மை இல்லை..

ஒப்பிடாதே..

உருவம் வெவ்வேறு அளவு ஆனாலும்
உயிரின் எடை ஒன்றுதான்!

பெண்ணைக்கவர வேண்டுமா?
புகழ்ந்து பேசு!

மண்ணைகவர வேண்டுமா?
தாழ்ந்து போ!

உடனடியாய் வீழ்ச்சி வேண்டுமா?
தாழ்வு மன்ப்பான்மை கொள்!

எதுவும் எதற்கும் தாழ்ந்ததில்லை..

எறும்புக்கும் வயிறு உண்டு..

கொசுவுக்கும் இனவிருத்தி உண்டு!

தாழ்வு மன்ப்பான்மை
மூளையில் அடிக்கப்பட்ட ஆணி..
எடுப்பதும் கடினம்..
எடுக்காமல்விட்டாலும் கடினம்..

ஆண்களுக்கு கற்பு இல்லையா?

Wednesday, November 30, 2011


இந்த தலைப்பை பார்த்ததும் அல்லது படித்துமுடித்ததும் ஆண் வர்க்கத்தில் யாரும் கோபம் கொள்ள வேண்டாம்...

ஆண்களில் சிலபேருக்கு கற்பு என்றாலே அது பெண்கள் சமாச்சாரம் எனவும்,நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் ஒரு எண்ணம் உண்டு.

கற்பு என்பது பெண்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு அவையம் இல்லை..அது ஒரு ஒழுக்கம்!..இருவருக்குமே பொதுவான விசயம்..

தனக்கு வரும் மனைவி ஒழுக்கமான கற்புள்ள பெண்ணாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆண் வர்க்கமே!

உங்கள் நினைப்பு தவறில்லை..ஆனால் உங்களுக்கும் கற்பு முக்கியமல்லவா?

ஆண்  என்றால் எப்படி வேண்டுமானாலும் மேயலாம் என எண்ணமா?நமக்கும் கற்பு உண்டு!ஒழுக்கம் உண்டு!

ஆகையால் அரசாங்கமே இனி பெண்களுக்கு ஒரு விபச்சாரவிடுதி இருப்பதுபோல் ஆண்களுக்கும் ஒன்று தேவை.

அங்கே தனக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுத்து தன் பசியை தீர்த்துக்கொள்ளட்டும் பெண்கள்!

அப்போதாவது கற்பு என்றால் என்னவென்று இவர்களுக்கு புறிகிறதா பார்ப்போம்!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..

இனி எந்த ஆணும் எந்த பெண்ணையும் விபச்சாரி..நடத்தைகெட்டவள் என மனதிலோ அல்லது வார்த்தைகளிலோ வசை மொழிய வேண்டாம்..அதற்கு முன் அதை சொல்ல நாம் தகுதியானவர்களா என நம்மையே நாம் கேட்டு கொள்வோமாக!

கடைசியாய் ஒன்று..
விபச்சாரம் என்பது இரு உடல் சார்ந்த விசயம் மட்டும் இல்லை..
பார்க்ககூடாததை கண் பார்த்தால் அது கண் செய்யும் விபச்சாரம்!
நினைக்ககூடாததை நினைத்தால் அது மனம் செய்யும் விபச்சாரம்!

இதனால்தான் இறைவன் தன் இறுதி வேதத்தில் நீங்கள் விபச்சாரம் பக்கம் நெருங்கவே வேண்டாம் என சொல்கிறான்..

சேய்ய வேண்டாம் என்பதற்கும்,நெருங்கவே வேண்டாம் என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை..

ஒரு ட்யூப் லைட் பக்கத்தில் இருக்கும் ஸ்விட்ச்சில் கைவைக்காதே என சொன்னால் கரண்ட் இருக்கு...ஆபத்து என அர்த்தம்(எப்படியாவது பிழைத்து கொள்ளலாம்)

ஆனால் ஒரு பெரிய ட்ரான்ஸ்பாரம் இருக்கிறது..அங்கே ஒரு போர்ட் தொங்கும்
நெருங்காதே அபாயம் என்று(தொட்டால் பிழைக்க வாய்ப்பே இல்லை)

ஆகவே ஆண் வர்க்கமே விபச்சாரம் பக்கம் நேருங்கவே நெருங்காதீர்கள்!




இந்திய விவசாயம்...

Thursday, November 24, 2011

மூட மூடையா விளயுமின்னு
மூட நம்பிக்கைல வித விதச்சேன்
மழை ஒரு சொட்டு விழலையே
உலை வீட்டில் எரியலையே


வறப்பு வெட்ட முதல்ல
வளையல் அடகு வச்சேன்
களை புடுங்க பிறகு
கம்மல காவு வச்சேன்


பூமிக்கடியில தண்ணி
புள்ளியா போச்சு
இப்படியே போனா
இனி நின்னுடுமோ மூச்சு?


இன்று வருமோ இல்ல நாள வருமோ?
இல்லாட்டி போனா
கடைசில என் சாம்பல
கரைக்கும் வெள்ளமா வருமோ?


சோலக்காட்டு பொம்மைக்கே
ஆடைக்கும் அலங்காரத்துக்கும் துப்பிருக்கு
சோலையம்மா மவ எனக்கு
கண்ணுல மட்டும் உப்பிருக்கு


கல்யாணத்துக்கு வரச்சொன்னா
குழந்தைக்கு பேர்வைக்க வந்தது போல
புசுக்குன்னு ஒருநாள்
பொல பொலன்னு பெஞ்சுது மழ

அடிச்ச பேய் காத்துல வீட்டுகூர
ஆகாயம் போயிடுச்சி
வீணா போன மழையால வீடுகரஞ்சி
வீதிக்கு வந்திருச்சி


கடைசியா உயிர்வாழ
வெதச்ச நெல் மிச்சமிருக்கு
அதுவும் கைகூடுமோ என
அச்சமும் நெஞ்சிலிருக்கு


விதச்ச நெல் விளஞ்சி ஒருநாள்
வீதிக்கு வந்ததையா!
பஞ்சத்துக்கு பாதி!
பங்கு போனது மீதி!

தமிழக மக்கள் பாவம்தான்...

Saturday, November 19, 2011

காலை..வழக்கம்போல் வேலைக்காக பேருந்தில் அமர்ந்து நடத்துனர் பயணச்சீட்டு கேட்டதும் பணம் கொடுக்கும் போதுதான் தெரியவந்தது இந்த கொடுமை!

(யாரும் தப்பா நினைக்க வேண்டாம்..பேப்பர் படிப்பதை நிறுத்தி ஒரு மாதமாச்சி)

அட இது என்ன பிரமாதம்?அனைத்து அரசு ஊழியர்களுக்கும் காலையில்தாம் தெரியுமாம்!

விசயம் உங்களுக்கு புறியலையா?
அதான் பேருந்து கட்டண உயர்வும்,பால் உயர்வும்!

பேருந்து முழுக்க ஒரே அழுகை சத்தம்(நிஜ அழுகை இல்லை)
"எவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கொடுமைதான் நடக்குது இங்கே"ஒரு பெருசு புலம்பி தீர்த்தது.

"ஒரு மூன்று நாளாவது அவகாசம் தர வேண்டாமா?திடுப்புன்னு இப்படி அறிவிச்சா நடுத்தர மக்கள் என்ன செய்வாங்க?என்ன பு...ன்ன அரசாங்கமோ??"கம்பளியாய் கத்தரிக்கப்பட்ட ஒரு கிடா மீசை பொறுமி தள்ளியது.

"தமிழ் நாட்டுக்காரன் எல்லாம் பைத்தியக்காரங்க..இப்ப இப்படி ஏத்திப்புட்டு அடுத்த எலக்சனுக்கு ஒரு வருசம் முன்னாடி 20 ருபாயில மூன்று ருபா குறச்சா போதும்...முட்டா பசங்க 17 ருபாய் இன்னும் குறைக்காம போனது அறிவுக்கு எட்டாது..ஏய்ய்ய்...மூனு ருபா குறச்சுட்டாங்கன்னு தம்பட்டம் அடிப்பானுக" பேசும் வார்த்தைகளில் சற்று பிழையுடன் சற்றே விபரமான ஒரு படித்த இளைஜன்.


சரி விசயத்திற்கு வருவோம்...

இதற்கு நான் எந்த கருத்தும் சொல்ல விரும்ப வில்லை...
ஒரு கவிதை வரிகளை நியாபக படுத்த விரும்புகிறேன்..

"குரங்கு கையில் பூமாலை
பைத்தியக்காரன் கையில் குழந்தை
தமிழர்களின் கையில் ஓட்டுக்கான வாக்குச்சீட்டு"

என்னப்பா செய்யமுடியும்?திராவிட கழகம்தான் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என விதிபோல என நீங்கள் மனதில் கூறுவது எனக்கு கேட்கிறது..
இனிமேலாவது சிந்தித்து ஓட்டு போடுங்கள்!
ஓட்டு போட்டுவிட்டு சிந்த்திக்க வேண்டாம்!

என்னையும் தமிழையும் காப்பாற்று!

Tuesday, November 15, 2011

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"

எப்போதும் வயிறையே பார்த்துக்கொண்டிருப்பதால் அவனுக்கு நிமிர ஏது நேரம்?
தமிழ் என் உயிர் மூச்சு என மூச்சுக்கு நாணூறு தடவை சொல்லும் சில அரசியல் வாதிகளே!
உங்கள் பிள்ளைகளில் ஒருவரை..அல்லது பேரக்குழந்தைகளை..இல்லைவிடுங்கள்..உங்கள் பரம்பரையில் ஒருவரை என்றாவது தமிழ் மீடியத்தில் படிக்க வைத்ததுண்டா?
சாரி..சாரி..(டாய் சேக்..நீயுமா அந்த வரிசையில்??)..உங்களுக்கும் தமிழ் பற்று உண்டு.....


நீங்கள்அதை காட்டுவது எதில் தெரியுமா?

உங்கள் கவிதைகளில்..வசனங்களில்(வாவ்! பிரமாதம்!)


ஆனால் செயல் முறையில்?????

தமிழுக்காக உழைத்தவர்களை அடையாளம் காட்ட சொன்னால் சுடுகாட்டிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை..


முன்பெல்லாம்..
"அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!"பாட்டுப்பாடி குழந்தைகளுக்கு உணவளிப்பதுண்டு..ஆனால் இன்று
"ரெயின் ரெயின் கோ அவே
கம் கம் அனதர் டே"என சொல்வதும்...
ஏன் நம் பேச்சு வழக்குகளில் கூட நைட்,டின்னர்..என நம்மை மறந்து தமிழை மறப்பதும்,,மறுப்பதும்....

எதைக் காட்டுகிறது??

நாம் உண்மையான தமிழர்கள் என்றா??


"ஒரு புரட்சியாளன்
விழாவின்போது வியக்கப்படுகிறான்
விடிந்ததும் மறக்கப்படுகிறான்"என்பதுகேற்றவாறு
தமிழை நாம் அனைவரும் நினைவு கூறுவது தமிழ் புத்தாண்டு அன்றுதானே?

தமிழும் தமிழர்களும் ஒரு ஒற்றையடிப் பாதையில் ஒன்றாய்தான் நடுந்து வந்துகொண்டிருந்தார்கள்
ஆனால் இப்போது தமிழர்கள் சற்றே திரும்பி பார்க்கிறார்கள்..தூரத்தில் தமிழ் சிறிய புள்ளியாய்......

ஆங்கிலம் படித்தால்
அயல் நாட்டிற்கு போகலாம்
தமிழ் படித்தால்
வயல் காட்டிற்கு போகலாம்..


அப்படியா என் செல்வங்களே???

சரி போனது போகட்டும்..இனியாவது திருந்தி தமிழை வாழவிடுங்கள்..ஏதும் தப்பா சொல்லிருந்தா சாரி...(சே சே..உங்க கூட சேர்ந்து நானும் கெட்டுபோயிட்டேன்)

இறைவா!இந்த கூட்டதிலிருந்து என்னையும் தமிழையும் காப்பாற்று!

கடவுள் இருக்கிறாரா?

Saturday, November 12, 2011

இது ஒரு சர்ச்சையான கேள்வி...இருந்தாலும் இதற்கு பதில் தருவது என் கடமை அல்லது விருப்பம்.

கடல்,மலை,வானம் எல்லாம் படைத்தவன் இறைவன்தான் என்றால் கடவுளை கண்முன் காட்டு நம்புகிறோம் என்கிறார்கள்...

சரி...நல்ல வாதந்தான்...ஆனால் இதே ஒரு செல்போனையோ அல்லது வெறு எந்த பொருளையும் கண்முன் காட்டினால் அதை எவன் தயாரித்தான் என சொன்னாலும் ஒப்பு கொள்வார்கள்..
இதென்ன கொடுமை சார்?

ஒரு சாதாரண பேனாவோ இல்லை செல்போனோ ஆள் துணையின்றி உருவாக முடியாது என்கிறபோது..மலை,கடல்,வானம் எல்லாம் எப்படி வந்ததாம்?ஜீ...பூம்பாவா?

சரி ஒரு கற்பனை..
இந்த உலகமக்கள் அனைவரும் ஒருநாள் இறந்து போகிறார்கள்..அதற்கு பிறகு நம்மைபோல் மனிதர்கள் அல்லது நம்மைபோல் ஆறரிவுடைய வேறு எந்த படைப்போ பூமியில் தோன்றுகிறார்கள் எனகொள்வோம்..
சட்டையை பார்ப்பார்கள்...இவை பருத்தி செடிகள் தானாகவே பஞ்சை உதிர்த்தன..பஞ்சு நூலாய் மாறியது..பின் நாளடைவில் அவை பரிணாமம் அடைந்து ஆடைகளாயின என மடத்தனமாக சிந்திப்பான்..
ஒரு பேருந்தை பார்ப்பான்..இது எப்படி வந்திருக்கும் என மூளையை கசக்கி ஒரு முடிவுக்கு வருவான்..வானத்திலிருந்து இரும்புகள் பூமிக்கு வந்தன..சிறிது சிறிதாக அவை ஒன்று சேர்ந்து பேருந்தாய் உருவானது...ஒருநாள் கடல்பக்கம் போனபோது ஒரு பெரிய புயலால் பேருந்தின் மேல்பகுதி பிய்த்தெறியப்பட்டு வானத்தை நோக்கி போனது அதுதான் விமானம்..கீழ்பகுதி கடுலுக்குள் ஓடியது அதுதான் கப்பல் என்பான்..

ங்கொய்யால..உன்னோட சிந்திக்கும் திறமைக்கு ஒரு அளவே இல்லையா?

இன்னொரு விசயம் நாம் சிந்தித்து பார்த்தோமா?
விண்வெளியில் எத்தனையோ கோள்கள் சுற்றி வருகின்றன..தெரிந்தோ தெரியாமலோ அவை ஒன்றுக்கொன்று அடிக்கடி மோதி கொண்டதில்லை..யாருக்கோ கட்டுபட்டதுபோல் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன...

இதை யார் இயக்குகிறார்களாம்?
இரவு, பகல் என்ற விசயத்திற்கு வருவோம்..பூமி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சூரியனை சுழல்கிறது..இதனால்தான் இரவுபகல் ஏற்படுகின்றது..சந்தோசம்..

இது தானாகவேதான் நடக்கிறது எனில் ஏன் ஒரு நாள் கூட 20 மணி நேரம் பகலாகவும்..நான்கு மணி நேரம் இரவாகவும் மாறுவதில்லை...
ஏன் நாட்கள் 365 லிருந்து 500 ஆகவோ இல்லை 600 ஆகவோ அதிகமாவதில்லை..இதற்கு யார் காரணமாக இருக்க முடியும்?
...ஜீ பூம்பா?

இதைபற்றி யாரிடமாது விசாரித்து பார்த்தால் தெரிந்தோ தெரியாமலோ "எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்"என்பார்கள்..

சரி மனிதன் தான் சொந்த திறமையில்தான் வசதியாக இருக்கிறான்..சாப்பிடுகிறான் எனில்..எல்லா மனிதர்களும் ஒரே மாதுரி இருக்க வேண்டுமல்லவா?
எப்படி உருவானது நடுத்தர வர்க்கமும்,எல்லா தேவைகளுக்காகவும் மற்றவர்களையே நாடும் கூட்டமும்..????

சிந்த்திப்பீர்களாக!

கடவுளை நம்புங்கள்!நன்மையை ஏவி தீமையைதடுங்கள் !


உயிர்வதை சாத்தியமா?

Thursday, November 10, 2011

பொதுவாக நம்மிடையே நாம் உயிர்களை வதை செய்கிறோம்..கொடுமை படுத்துகிறோம் என்ற குற்றச்சாட்டு உண்டு..

சரிதான் வாஸ்தவமான குற்றச்சாட்டுதான்...இருக்கட்டும்..

ஆனால் சில கேள்விகளுக்கு எனக்கு விடை தேவை..
1.நாம் தினம் குடிக்கும் தண்ணீரில் கூட பல்லாயிரம் நுண்ணுயிர் கிருமிகள் செத்து மடிகின்றன..அவைகள் "குய்யோ முறையோ"என கதறுவது நம் காதுகளுக்கு கேட்க்காததால் அதை வதை என நாம் சொல்வதில்லை..
ஆக சின்ன உயிர் இறந்து போனால் அது வதை இல்லை..

ஒன்று தெரியுமா?
உடலின் எடை வெவ்வேறு ஆனாலும் உயிரின் எடை ஒன்றுதான்!

2.நாம் பசுக்களிடமிருந்து பால் கறப்பதில் கூட கன்றுகுட்டியைவைத்து பசுவை ஏமாற்றிதான் பால் கறக்கிறோம்..இதற்கு"எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன்"என பெயரா?
இதையே தான் பெற்ற குழந்தைக்கு மற்றவர்கள் செய்தால் தாய் சும்மா இருப்பாளா?

3.வயல்களில் பாதுகப்பு எனும் பெயரில் நிறைய எலிகள் மற்றுமின்றி சபந்தமே இல்லாத மற்ற உயிரினங்களை கொல்கிறோம்..இதற்கு"விவசாயம்"என பெயரா?

இறைவன் நினைத்திருந்தால் மாமிசங்களைகூட மலைபோல் படைத்திருக்க முடியும்..அப்படி படைத்தால் கெட்டு போகாதா?அதனால்தான் சிறிய உயிரினங்களாக மனிதனுக்காக படைத்திருக்கிறான்..

எனவே எல்லாம் மனிதனுக்காக படைக்க பட்டவைகளே!

செடிகளுக்கு கூட உயிர் உண்டே தெரியுமா?

வேட்டை என்பது கவிஞரின் கூற்றுப்படி"எளியதின் மீது வலியதின் ஆதிக்கம்"
உயிரனங்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன் மனிதன்..

வேட்டை சட்டபடி குற்றம் என குறை சொல்லாதீர்கள்..எந்த வேதமும்,இதிகாசமும் வேட்டையை குற்றம் என சொல்லவில்லை..

எல்லாம் ஜாதி கொடுமைகள் போல் மனிதர்கள் மனிதர்களுக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்டவை...

சரி..இப்போது சொல்லுங்கள்..உயிர்வதை என்பது சாத்தியமா?சத்தியமா சொல்லுங்க...

இவை சாத்தியப்படுமா?


விசை அழுத்தியதும்
விண்ணிலிருந்து மழை....

குளியலறைக்குள்
குற்றால அருவிகளில் ஒன்று...

சேவலை எழுப்பும் மனிதர்களும்
சேரிகள் இல்லாத ஊர்களும்..

கிழிக்கப்பட்டதேதி
மறுபடியும் பிறக்கவும்...

சுவற்றிலிருந்து திரும்பும் பந்தின்
வேகத்தில் காதல் சொன்னதும் பதில்..

நிராகரிக்கப்படாத
நிலாவும் இதே வரிசையில் கவலையோடு
என் கவிதைகளும்...