வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

டி ராஜேந்தரின் மகிமை உங்களுக்குத்தெரியுமா?

Friday, February 01, 2013





எப்படி இளையராஜா என்ற ஞானியின் இசை சிம்மாசனத்தின் இருக்கையில் யாரும் இனி அவர் உட்பட அவர்போன்ற கலைஞர்கள் உட்கார முடியாதோ..

அதுபோலவே சில கலைஞர்கள் உண்டு..

அதில் மறக்கமுடியாதவர் டி.ராஜேந்தர்


டி. ராஜேந்தர் அவர்கள் ஒரு பன்முக கலைஞன் இவரது நடிப்பாகட்டும், தமிழாகட்டும் ரசிக்க கூடியவையே!
மேலும் அவர் ஒரு பல குரல் மன்னன், பல திரைப்படங்களை அவரே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். மேலும் இவர் ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளரும் ஆவார்.


மைக் கேமிரா கெடச்சா போதும்...பாவம் மேஜைக்குத்தான் வலிக்கும்..டக்கு டக்குனு வாயினால் ம்யூசிக் போட்டு..டனக்குடக்கா ஏ.ஏ..டண்டனக்கா ஆரம்பித்துவிடுவதுதான் இவர்கிட்ட பிடிக்காத ஒரு விசயம்...

இப்ப இருக்கிற டைரக்டருங்க எப்படியாச்சும் சைடு கேப்புல ஒரு ரேப் சீன் ஒரு கிளுகிளுப்பு பாடல் சேர்த்துடுவாங்க

நம்ம அண்ணன் கை அதுல பரிசுத்தமானது..அதையும் தாண்டி புனிதமானது!புனிதமானது!

தங்கச்சி பாசத்திற்கு மொத்த குத்தகைக்காரர் நம்ம அண்ணந்தான்..

அந்த காலத்தில் இருந்து இந்த காலம்வரைக்கும் காதல மையமா வச்சு எடுத்த படந்தான் அதிகம்..

அண்ணன் மட்டுந்தான் தங்கச்சிமார்களை வச்சு படம் எடுத்து அவர்கள் பெருமையை உசத்தியாக்கியவர்



இன்னொரு முக்கியமான விசயம்..

இப்ப இருக்குற ஹீரோக்கள் ஒரு முத்தம் கொடுக்குற சீன்,கட்டிப்புடிக்குற சீன் வந்தா அவங மனுசுக்குள் மத்தாப்புதான்

அந்த விசயத்துல அண்ணனை நான் தலைல தூக்கி வச்சு ஆடுவேன்

இந்த விசயத்தில் இவரை எந்த ஹீரோவும் ஏணி (துபாயில் இருக்குற உயரமான பில்டிங் அளவுக்கு) வச்சாக்கூட எட்ட முடியாதுங்கோ

எந்த ஹீரோயினையும்  ஒருபொட்டுக்கூட தொடமாட்டார்..

அதைவிட ஒரு சிறப்பு என்னவென்றால்.....
இவர் எடுத்த சினிமாக்களில் அதிகபட்சம் ஒன்பது எழுத்துக்களிதான் இருக்கும் என்பது சிறப்பு

திருக்குறளில் எந்த அடியிலாவது சீர்கெட்டு போயிருக்கானு வைரமுத்து முயற்சி செய்து தோற்றமாதுரி நானும் இவர் படுத்துல ஏதாவது ஒரு படம் எட்டு அல்லது ஏழு எழுத்தில் இருக்கானு பார்த்து மண்ணை கவ்வியுருக்கேன்

நீங்களுந்தான் பாருங்களேன்!


இவர் 80களில் அடுக்குமொழிகளில் சிறந்த கவிதைகளை எழுதி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.
இத்தகைய சிறப்புக்களை பெற்றவரை ஏனோ தெரிய வில்லை பத்திரிகைகள், ஊடகங்கள், இணையதளங்கள் போன்றவை இவரை ஒரு கேலிப்பொருளாகவே பார்க்கின்றன• இந்நிலை மாற வேண்டும். இவரது தோற்றத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வே ண்டாம். இவருக்குள் இருக்கும் திறமைகளை கண்டு ரசியுங்கள் சிந்தியுங்கள்.




13 பேர் சொன்னது....:

Anonymous said...

Good

DiaryAtoZ.com said...

True.

Anonymous said...

you are correct,,,

Anonymous said...

True

Unknown said...

டியர் அனானிமஸ்..
நீங்கள் யார் என தெரியாது..ஆனால் கருத்து சொன்னதற்கு நன்றி

Unknown said...

diary a to z.com

thank u for visiting..come again...

Anonymous said...

oru thalai ragam - 7 letters
rail payanangalil - 10 letters

Manimaran said...

அருமையான கலைஞன்...கௌரவப்படுத்தியதற்கு நன்றி

UNMAIKAL said...

மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

>>>>>>
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.

Unknown said...

டியர் அனானிமஸ்!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே இல்லையா?
ஏன் அவ்வளவுதூரம் போறீங்க?கடைசியா வந்த வீராசாமி நான்கு எழுத்துதான்...

அப்போ ராஜேந்தர் அண்ணன் எடுத்த அதிகமான படங்கள் ஒன்பது எழுத்துக்களாக இருக்கும்னு மாற்றிக்கொள்கிறேன்..

Unknown said...

டியர் மணிமாறன் சார்!

தாங்கள் வருகைக்கு நன்றி!
ஏதோ நம்மலால முடிஞ்சது சார்..தமிழ் சினிமாதான் வாயை மூடிகிட்டு இவரை போன்ற கலைஞனை ஒதுக்குகிறது...நாமலாவது ஏதும் செய்யலாமேனு ஒரு ஆசைலதான் இந்த பதிவு

Jayadev Das said...

இவர் படுத்துல ஏதாவது ஒரு படம் எட்டு அல்லது ஏழு எழுத்தில் இருக்கானு பார்த்து மண்ணை கவ்வியுருக்கேன்\\veerasami - Wav you are correct!!

Unknown said...

///இவர் படுத்துல ஏதாவது ஒரு படம் எட்டு அல்லது ஏழு எழுத்தில் இருக்கானு பார்த்து மண்ணை கவ்வியுருக்கேன்\\veerasami - Wav you are correct!!
February 8, 2013 at 8:17 PM //

ஜயதேவ் சார் வருகைக்கு நன்றி

நானும் தவறை ஒப்புக்கொண்டு அதை மாற்றி ரொம்ப காலம் ஆயிடுச்சு சார்..

சோ சாரி யூ ஆர் டூ லேட்

Post a Comment