வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

அறிந்தும் அறியாமலும்...

Friday, April 19, 2013





Man in love - red roses everywhere




நிர்வாணத்திலிருந்து
ஆடை என்பதே
ஆதாமின் நாகரீகம்!

ஆடைகுறைப்பு
அறிந்தா அறியாமலா?

நாகரீகம் எத்தனைபேசினாலும்
பக்கத்துசீட்டில் பேதை அமரும்போது
ஆண்மையின் ஆணிவேருக்கு
அபாயசங்கு அடித்தது
தெரிந்தா?தெரியாமலா?

பேதையின் குட்டைப்பாவாடை
பார்த்து காற்றிடம்
பயமா?ஆசையா?

பந்தியில் அமரும்போது
பக்கத்து இலையை
ஓரக்கண்ணால் பார்த்தது
ஒப்பிட்டு பார்க்கவா?அனிச்சையாகவா?

சன் டீவியின் அரட்டை அரங்கத்தில்
தானாக புன்னகை செய்தது
தன்னிச்சையாகவா?கேமராவிற்காகவா?

பஸ்ஸில் நின்றுகொண்டிருந்த மங்கைக்கு
எழுந்து இடம் கொடுத்தது
இரக்கமா?ஏதேனுமா?

ஒவ்வொருமுறையும்
ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கு
லைக் போடுவது
படித்தா?படிக்காமலா?

கடைசியாய் ஒன்று...

யாசகம் கெட்டவனிடம்
பணமிருந்தும்
பிச்சைக்காரனாய் மாறியது
அறிந்தா?அறியாமலா?

என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? – கே பாக்யராஜ்

Friday, April 05, 2013


 08-bagyaraj-2-300

சென்னை: இன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு சொந்தமானது என பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றிருப்பதை என்னவென்பது, என்கிறார் வேதனையுடன் இயக்குநர் கே பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்றும் இயக்குநர் திலகம் என்று புகழப்படும் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் இன்று போய் நாளை வா. இந்தப் படத்தின் கதையை பாக்யராஜுக்கே தெரியாமல் விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளார் புஷ்பா கந்தசாமி. அந்தக் கதையை சத்தமில்லாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று படமாக எடுத்து, பொங்கலுக்கு அவசர அவசரமாக வெளியிடத் தயாரானபோது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர் தயாரிப்பாளர்கள் ராம நாராயணனும் சந்தானமும். இந்தக் கதைத் திருட்டு குறித்து போலீசுக்கு 3 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ள பாக்யராஜ், படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடரவும் தயாராகி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தன் வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டார். “தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும் எனது கதைகள் பற்றி. யாராக இருந்தாலும் என் கதையை உரிய முறையில் கேட்டு படம் பண்ணி ஜெயித்திருக்கிறார்கள். இந்தியில், தெலுங்கில் இன்று வரை அப்படித்தான் நடக்கிறது. ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் அநியாயம் சொல்ல முடியாதது. ஒரு படைப்பாளியை இப்படியா கேவலப்படுத்துவார்கள்? கதைக்கு சொந்தக்காரன் நான். திரைக்கதை, வசனம் அனைத்தும் எனக்கே உரியது. இந்தக் கதையை படமாக எடுக்க புஷ்பா கந்தசாமி என்னிடம் கேட்டார். நான் தரமுடியாது என்று கூறிவிட்டேன். காரணம் என் மகனை வைத்து இந்தப் படத்தை எடுத்து அவனுக்கு ஒரு பிரேக் தர விரும்பினேன். அடுத்து ராமநாராயணன் கேட்டார். அவருக்கும் அதே பதில்தான். நான் கதையைத் தரவில்லை என்றவுடன், என் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி புஷ்பா கந்தசாமியும் அவரது குடும்பத்தினரும் ராமநாராயணனுக்கு விற்று பணம் பார்த்திருக்கிறார்கள். இது நியாயமா…?,” என்றார்.

இது உண்ணாவிரதமல்ல, பேசாவிரதம்: ஒருத்தரும் வாய் திறக்கவில்லை!

02-fast-rajini-sarath-300


சென்னை: நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி நேரங்களுக்குப் பிறகு எழுந்து சென்றனர். இந்த உண்ணாவிரத அறிவிப்பு வந்த உடனே முடிவு செய்யப்பட்ட விஷயம், யாரும் எந்தவித கருத்தையும் உண்ணாவிரதப் பந்தலில் பேசக் கூடாது. அதற்கு பதில் ஒருமனதாக உண்ணாவிரத முடிவில் தீர்மானங்களை நிறைவேற்றிவிடலாம் என்று முடிவு செய்து, அதை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தெரிவித்திருந்தனர். வழக்கம்போல நடிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பேசி சிக்கலை உண்டாக்கிவிடப் போகிறார்கள் என்ற பயம்தான் இதற்கு முக்கியக் காரணம். மத்திய அரசுக்கு எதிராக, அல்லது காங்கிரசுக்கு எதிராக காரசாரமாகப் பேசி, வம்பை விலைக்கு வாங்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே இந்த சுயகட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே தன் சொந்தக் கருத்து என்று சிலர் ரொம் எச்சரிக்கையாகப் பேட்டி கொடுத்ததைப் பார்க்க முடிந்தது. ரஜினி, கமல், அஜீத், சூர்யா, விக்ரம், தனுஷ் என உண்ணாவிரதத்துக்கு வந்த அனைவரும் வெறுமனே பந்தலில் அமர்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெயில் வேறு மிகக் கடுமையாக இருந்ததால், நீண்ட நேரம் அவர்களால் பந்தலில் அமர் முடியவில்லை.

'நானும் சத்தியராஜும் கணவன் மனைவி போன்றவர்கள்'






அமைதிப் படையின் இரணடாம் பாகமான நாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ அரசியல் படம்தான். ஆனால் யாராயும் குறிவைத்துத் தாக்கும் படமல்ல.
இன்றைய அரசியல் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் படம். இப்படிப் படம் எடுத்ததால் தாக்குதல் நடத்துவார்களோ என நான் பயப்படவில்லை. என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேச முடியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

ஐம்பதாவது படம்

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். 1994-ல் அவர் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ  என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இயக்குநராக இது அவருக்கு 50 வது படம்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் மணிவண்ணனின் பேச்சு.

"நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்...

இளையராஜாவால் இயக்குநர் ஆனேன்...

அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன்.
அழகன் - அழகி திரைப்படத்தில் பவர்ஸ்டார் போஸ்டர்
வணக்கம் சென்னை : ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்
விஜயின் தலைவா :  புதிய படங்கள்
சேட்டை பிரஸ் மீட் படங்கள்
 ரணம் : திரைப்பட படங்கள்
புதிய திருப்பங்கள் : ஸ்டில்ஸ்
புதிய திருப்பங்கள் : ஆடியோ வெளியீடு
கவிதை : திரைப்பட போஸ்டர்ஸ்
அபர்னா : புதிய படங்கள்
நடிகை அம்பிகா புதிய ஸ்டில்ஸ்
சேட்டை : புதிய படங்கள்

ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன்.

அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல,  ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குதான் நன்றாகத் தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு!

நாங்கள் இருவருமே கணவன் - மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான் கட் சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, 'தலைவரே.. கட் சொல்லுங்க' என்பார்.

அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை. அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்.

சூது கவ்வும் : ஆடியோ வெளியீடு படங்கள்

சூது கவ்வும் : ஆடியோ வெளியீடு படங்கள்
சூது கவ்வும் : திரைப்பட போஸ்டர்
சூது கவ்வும் : பிரஸ் மீட்
மஞ்சப்பை : ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்
காந்தாரி : திரைப்பட ஸ்டில்ஸ்
நடிகர் வீர பாகு : திருமண ரிஷப்ஷன் படங்கள்
ஆனால்... மவனே... என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும்.

50 நாளில் நேர்த்தியாக படமெடுக்கலாம்...

சரியாக திட்டமிட்டுப் படமெடுத்தால் ஒரு நல்ல, பெரிய படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடிக்கலாம்.

நான் இளைஞன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். பெரிய பெரிய செட் போட்டிருந்தார்கள். பின்னி மில் முழுக்க செட்கள்தான். நானும் அந்தப் படப்பிடிப்புக்கு போவேன். நாள் பூரா சும்மாதான் உட்கார்ந்திருப்பேன். எப்போதாவது கூப்பிடுவார்கள். சார், டிபன் சாப்பிடுங்க என்பார்கள். இப்படித்தான் அந்தப் படப்பிடிப்பு போனது. படம் வெளியான பிறகு, அந்தப் படம் முழுக்க தேடிப் பார்த்தேன். அந்த செட்களில் ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை!








என்னைப் பத்தியும் ஏதாவது எழுதுங்கப்பா!
இன்றைக்கு ஊடகங்கள் பெருகிவிட்டன. பல முகங்கள் எனக்குத் தெரியவே இல்லை. தினமும் பேப்பர்ல பேரு வரலேன்னா அரியல்வாதிகளுக்கு அடுத்த வேளை சோறு இறங்காது. அதிலும் அந்தக் கட்சிக்கு பெரிசாவும், இந்தக் கட்சிக்கு சின்னதாவும் செய்தி வந்தா அன்னிக்கு தூக்கமே போயிரும் அவங்களுக்கு.
என்னமோ நடக்குது : திரைப்பட படங்கள்
எல்லாம் நீயானாய் : திரைப்பட குழு செவ்வி படங்கள்
நடிகை அனியா : படங்கள்
நடிகை ஆஷா பெலிஷியா : படங்கள்
வெற்றி : திரைப்பட ஆடியோ படங்கள்
நாம அப்படியெல்லாம் கேக்கல. ஆனாலும் எதாவது எழுதுங்கப்பா... என்னைப் பத்தியும் ஏதாவது பிட்டு போடுங்க அப்பப்ப... என்ன.. என்னைப் பத்தி எதுவும் கிசுகிசு எழுதினா யாரும் நம்ப மாட்டாங்க என்றார்.