
சென்னை: நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி நேரங்களுக்குப் பிறகு எழுந்து சென்றனர். இந்த உண்ணாவிரத அறிவிப்பு வந்த உடனே முடிவு செய்யப்பட்ட விஷயம், யாரும் எந்தவித கருத்தையும் உண்ணாவிரதப் பந்தலில் பேசக் கூடாது. அதற்கு பதில் ஒருமனதாக உண்ணாவிரத முடிவில் தீர்மானங்களை நிறைவேற்றிவிடலாம் என்று முடிவு செய்து, அதை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தெரிவித்திருந்தனர். வழக்கம்போல நடிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பேசி சிக்கலை உண்டாக்கிவிடப் போகிறார்கள் என்ற பயம்தான் இதற்கு முக்கியக் காரணம். மத்திய அரசுக்கு எதிராக, அல்லது காங்கிரசுக்கு எதிராக காரசாரமாகப் பேசி, வம்பை விலைக்கு வாங்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே இந்த சுயகட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.
ஆனால் உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே தன் சொந்தக் கருத்து என்று சிலர் ரொம் எச்சரிக்கையாகப் பேட்டி கொடுத்ததைப் பார்க்க முடிந்தது. ரஜினி, கமல், அஜீத், சூர்யா, விக்ரம், தனுஷ் என உண்ணாவிரதத்துக்கு வந்த அனைவரும் வெறுமனே பந்தலில் அமர்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெயில் வேறு மிகக் கடுமையாக இருந்ததால், நீண்ட நேரம் அவர்களால் பந்தலில் அமர் முடியவில்லை.
Tweet | ||||||
0 பேர் சொன்னது....:
Post a Comment