
நிர்வாணத்திலிருந்து
ஆடை என்பதே
ஆதாமின் நாகரீகம்!
ஆடைகுறைப்பு
அறிந்தா அறியாமலா?
நாகரீகம் எத்தனைபேசினாலும்
பக்கத்துசீட்டில் பேதை அமரும்போது
ஆண்மையின் ஆணிவேருக்கு
அபாயசங்கு அடித்தது
தெரிந்தா?தெரியாமலா?
பேதையின் குட்டைப்பாவாடை
பார்த்து காற்றிடம்
பயமா?ஆசையா?
பந்தியில் அமரும்போது
பக்கத்து இலையை
ஓரக்கண்ணால் பார்த்தது
ஒப்பிட்டு பார்க்கவா?அனிச்சையாகவா?
சன் டீவியின் அரட்டை அரங்கத்தில்
தானாக புன்னகை செய்தது
தன்னிச்சையாகவா?கேமராவிற்காகவா?
பஸ்ஸில் நின்றுகொண்டிருந்த மங்கைக்கு
எழுந்து இடம் கொடுத்தது
இரக்கமா?ஏதேனுமா?
ஒவ்வொருமுறையும்
ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கு
லைக் போடுவது
படித்தா?படிக்காமலா?
கடைசியாய் ஒன்று...
யாசகம் கெட்டவனிடம்
பணமிருந்தும்
பிச்சைக்காரனாய் மாறியது
அறிந்தா?அறியாமலா?