
நிர்வாணத்திலிருந்து
ஆடை என்பதே
ஆதாமின் நாகரீகம்!
ஆடைகுறைப்பு
அறிந்தா அறியாமலா?
நாகரீகம் எத்தனைபேசினாலும்
பக்கத்துசீட்டில் பேதை அமரும்போது
ஆண்மையின் ஆணிவேருக்கு
அபாயசங்கு அடித்தது
தெரிந்தா?தெரியாமலா?
பேதையின் குட்டைப்பாவாடை
பார்த்து காற்றிடம்
பயமா?ஆசையா?
பந்தியில் அமரும்போது
பக்கத்து இலையை
ஓரக்கண்ணால் பார்த்தது
ஒப்பிட்டு பார்க்கவா?அனிச்சையாகவா?
சன் டீவியின் அரட்டை அரங்கத்தில்
தானாக புன்னகை செய்தது
தன்னிச்சையாகவா?கேமராவிற்காகவா?
பஸ்ஸில் நின்றுகொண்டிருந்த மங்கைக்கு
எழுந்து இடம் கொடுத்தது
இரக்கமா?ஏதேனுமா?
ஒவ்வொருமுறையும்
ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கு
லைக் போடுவது
படித்தா?படிக்காமலா?
கடைசியாய் ஒன்று...
யாசகம் கெட்டவனிடம்
பணமிருந்தும்
பிச்சைக்காரனாய் மாறியது
அறிந்தா?அறியாமலா?
Tweet | ||||||
6 பேர் சொன்னது....:
ஆண்மையின் ஆற்றாமை
அழகு அத்தனை அழகு அத்தனையும் அழகு
கவிதையை கட்டுரை மாதிரி எழுதாதீங்க தல... எதுகை, மோனையையும் கொஞ்சமாவது பயன்படுத்துங்க...
கண்ணதாசன் சார்..இப்படி ஒரு வரியில் கவியரசை போல் சொல்லிட்டிங்களே!நன்றி
முகம்மத் ஜீ! அஸ்ஸலாமு அலைக்கும்...அடிக்கடி வந்து போங்க
கவிதை என்பது சிந்தனையின் உயரத்திலிருந்து அர்த்தங்களின் ஆழம்வரை குதிப்பது என்பதை அறிந்தவன் நான்.
கவிதை என்பது சிந்தனைகளின் சுருக்கம்!
சரி இங்கே....
ஆதாம்,ஆடை எதுகை இல்லையா?தானாக தன்னிச்சையாக என்பது எதுகை இல்லையா?
எதுகை மோனை என்பதே கவிதை எனற கட்டுப்பாட்டை புதுக்கவிதை உடைத்தெறிந்து நாள்களாயிற்று தம்பி/அக்கா!
அது சரி..வைரமுத்து தன் எதிரிகளை பார்த்து
உங்கள் முகவரிகளை ஏன் நீங்கள் முதுகிற்கு பின்னால் எழுதிவிட்டு போகிறீர்கள் என கேட்பார்...நானும் அதைத்தான் கேட்கிறேன்
Post a Comment