வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

சகோதரிகளே ஜாக்கிரதை!

Friday, January 25, 2013

 

சாதரணமாய் பெண்களில் சிலர் குளிக்கும்போதோ,பொது இடங்களில் உடை மாற்றும்போதோ தன்னை சுற்றி என்ன இருக்கிறது என்பதை கவனிப்பதே இல்லை...

அவர்களுக்கான அபாய எச்சரிக்கை இது!

நடிகைகளைத்தான் இப்படி வேவு பார்க்கிறார்கள் என்று இல்லை.பொது இடங்களில் கூட இப்படி நடக்கிறது!

உஷார்!



கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும்.

இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.

இவைகளை சுலபமாக கண்டறியும் முறை…


314621_512238282143911_890017348_n

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி.. இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.




சினிமா- சிறுகதை





இப்போதல்லாம் சினிமா பார்ப்பதே வெறுத்துவிட்டது..


ஒரு முத்தக்காட்சி,ஒரு ரேப் சீன்,ஆறு பாட்டு..இதுதான் இன்றைய சினிமா..


எத்தனைதடவை அடி வாங்கினாலும் கடைசியில் ஹீரோதான் ஜெயிப்பார்


கோழிகளை தோலுரித்து கடைசியில் அதன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய தோல்போல் சினிமா எனும்போர்வையில் இரண்டரை மணி நேர ஃபேசன் சோ


ஒருவேளை நாகரீகம் என்றால் இதுதானோ?

ஒன்றின் சுருக்கம் என்பதுதானே நாகரீகம்!

பண்டைய காலங்களில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாட்டு வண்டிலதான் போகனும்...ஆனால் இன்றைக்கு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு போக மணி கணக்குதான்..சொ விமானம் என்பது பயணத்தின் நாகரீகம்..

அரசர் காலத்தில்  மற்ற நாட்டிற்கு விபரம் தெரியபடுத்த பயன்படுத்தியது சிப்பாய்களையும் புறாக்களையும்..இன்றோ நிமிசத்தில் பல மின்னஞ்சல்கள்!..மின்னஞ்சல் என்பது கடிதத்தின் நாகரீகம்...

அதுபோல..அதுபோல...

ஆடை குறைப்பும் உடையின் நாகரீகமோ?.??



எந்த டைரக்டராவது நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்!  ஒரு படமாவது கவர்ச்சி இல்லாமல்....ஊஹூம்!

இருக்கிறது...ஏழை வீட்டில் சாப்பிட்ட பாயாசம்போல் ஒன்றோ?இரண்டோ?



இப்படியே போனால்...

இனி திருட்டுத்தனமாக தலையில் முக்காடு போட்டுக்கொண்டு..கொலை செய்தவன்போல் பயந்து பயந்து "அந்தமாதுரி"படங்களுக்கு போக தேவையில்லை...சாதரணமாக எல்லா திரையரஙகளிலும் பார்க்கலாம்...

சரிதானே?




க்ளைமாக்ஸ்..வில்லனோடு ஹீரோ மோதல்..கடைசியில் கைவிலங்கோடு வரும் போலிஸ்..இன்னும்விடாத பழைய சினிமாத்தனம்


"எவ்விடத்தில் கண்முழித்தோம் அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு"பாலுணர்வை தூண்டும் இதைவிட கேவலமான வரிகள் கொண்ட இரண்டு பாட்டு....

வேறு ஏதாவது வித்தியாசமாய் ஏதும்??ஊஹும்.....




நிற்க!





து 30ஆம் நூற்றாண்டு...

 டைரக்டர் வசந்தகுமாரும்,ப்ரொட்யூசர் ரகுரத்தினமும் போர்டிக்கோவிற்கு வேளியே இருந்த புல்வெளியில் பேசிக்கொண்டிருந்தனர் .

 "அடுத்த மாதம் இரண்டாம் தேதி படம் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கிறேன்...படுத்துல இரண்டு ரேப் சீன் இருக்கு.அப்புறம் ஒரு பாட்டு சீன்ல சில பழைய படம்போல் ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் போட்டிவருது..பழைய படங்களில் பாட்டின் முடிவில் ஹீரொ சட்டையை கழற்றி தூரவீசுவார்..ஹீரோயின் அதை செய்யமுடியாமல் தோற்றுபோவார்.."


 "இந்த படுத்துல புதுமையா என்ன இருக்கு சார்?"


 "இதுல ஹீரோ தன்னோட சட்டையை கழற்றுவார்.பிறகு ஹீரோயினும் சட்டையை கழற்றி எறிவார்"

 "என்ன சார் சொல்றீங்க?இதுக்கு மாதர் சஙத்தில் இருந்து எதிர்ப்பு வராதா?"


 "யோவ்!எந்த காலத்துலையா நீ இருக்க?20ஆம் நூற்றாண்டு காலத்து படத்துல..எனக்கு நல்லா நினைவு இருக்கு..சின்னஜமீன் அப்படீனு ஒரு படம்..அதுல ஹீரோயின வில்லன் 15 நிமிசம் கற்பழிக்கிற மாதுரி சீன் வரும்..இதுல க்ளோஸ் அப் காட்சி வேறு...அப்பல்லாம் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்குற சீனே ரொம்ப சாதாரணமா போச்சு...அதுக்கே அவங்க ஒன்றும் சொல்லவில்லை..நீயே போதும்போல"

 "சரி அப்புறம்?"

 "ஹீரோயின் சட்டையை கழற்றி எறிந்த உடனையே ஹீரோ ஒரு படி மேலே போய் உள்ளாடை எல்லாம் கழற்றி எறிவாரு.அப்புறம்தான் ஹீரோயின் வெட்கப்பட்டு தோற்பது போல் சீன் இருக்கு"

 "அதுவும் சரிதான்..ஆ..ஊன்னா...எல்லா படத்துலேயும் ஆண்கள் சாதிக்கிற எல்லாத்தையும் பெண்கள் சாதிக்கமுடியுமானு கேட்குறதும்,ஹீரோயின் முடியும்னு சொல்லவும் ஹீரோ சட்டையை கழற்றி நான் ரோட்டுல இப்படி போவேன் நீ போவியானு கேட்பதும் வாடிக்கையா போச்சு...அவங்களுக்கு இந்த படம் ஒரு சவுக்கடி"


 "அதெல்லாம் சர்தான்யா!இரண்டு ரேப் சீன் இருக்கு அத சென்சார் கைவச்சுட்டா எனக்கு வசூல் போச்சு"


 "இதுக்கா போய் வருத்த படுறீங்க?எப்படி புகை புடிக்கிற சீன் வரும்போது "புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கெடுதியானதுனு" ஒரு சின்ன ஸ்லைடு வருமோ அதுபோல இதையும் "கற்பழிப்பு ஜனநாயகத்திற்கு கேடுனு" ஒரு ஸ்லைடு போட்டா முடிஞ்சி போச்சு.என்ன நான் சொல்றது?"


வசந்தகுமார் சொல்ற ஐடியாவும் நல்லாதானே இருக்கு என்ற சந்தோசத்தில் ஒரு சிகரட் எடுத்து தன்வாயில் வைத்தபடியே தன் படத்தின் வெள்ளிவிழா  கனவில்மூழ்கிப்போனார் ரகுரத்தினம்.