வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

சகோதரிகளே ஜாக்கிரதை!

Friday, January 25, 2013

 

சாதரணமாய் பெண்களில் சிலர் குளிக்கும்போதோ,பொது இடங்களில் உடை மாற்றும்போதோ தன்னை சுற்றி என்ன இருக்கிறது என்பதை கவனிப்பதே இல்லை...

அவர்களுக்கான அபாய எச்சரிக்கை இது!

நடிகைகளைத்தான் இப்படி வேவு பார்க்கிறார்கள் என்று இல்லை.பொது இடங்களில் கூட இப்படி நடக்கிறது!

உஷார்!



கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும்.

இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.

இவைகளை சுலபமாக கண்டறியும் முறை…


314621_512238282143911_890017348_n

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி.. இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.




6 பேர் சொன்னது....:

VANJOOR said...

விழிப்பூட்டும் யாவரும் அறிந்து பிறரையும் அறிய செய்ய வேண்டிய அவசியமான பதிவு.

பாராட்டுகிறேன்.


வாஞ்சையுடன் வாஞ்ஜூர்

.

அருணா செல்வம் said...

பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய
பதிவு.
பகிர்விற்கு மிக்க நன்றி.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு. ஆனால் எப்படி சொல்ரீங்க?,இன்னும் கொஞ்சம் அறிவியல் சார்ந்து தகவல் கொடுங்களேன். காமிரா என்பது மிக சிறியதாக ஒளித்தே வைப்பார்கள். கண்ணாடியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருந்தால் முழுதும் தடவி பார்ப்பதும் கடினம்!!

ஆர்வத்தில் மட்டுமே கேட்கிறென்.

அறிவியலின் தவறான சமூக விளைவுகளுள் ஒன்று!!

நன்றி!!

Unknown said...

பாய் அஸ்சலாமு அலைக்கும்!ரொம்ப நன்றி!எங்கே பாய் இவ்வளவு நாளா ஆளையே காணோம்?

Unknown said...

தாங்கள் வருகைக்கு நன்றி அருணா செல்வம்!இன்னும் என்னால் முடிந்த அளவு இதுபோன்ற பதிவுகளை தொடர்வேன்...அடிக்கடி வருகை தாருங்கள்!

Unknown said...

அன்பு சகோதர சார்வாகன்!

முதலில் என் ப்ளாக்கிற்கு வருகை தந்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

கண்டிப்பாக சொல்கிறேன்....வேவு பார்க்கும் கண்ணாடி என்றாலே நீங்கள் எங்கே கைவைத்து பார்த்தாலும் அப்படித்தான் தெரியும்...இது எந்த அளவிற்கு உண்மை என நான் இது சம்பந்தமான என் அடுத்த பதிவில் தெளிவுபடுத்துவேன்..நன்றி!

Post a Comment