வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

யானைக்கும் அணைக்கும் மதம்

Tuesday, December 20, 2011


கங்கை யமுனை என
வெவ்வேறு பெயர் ஆனாலும்
நீரின் குணம் ஒன்று!

தமிழ் ஹிந்தி அரபு
என வெவ்வேறு மொழிகள்..
ஆனாலும் நாவு என்பது ஒன்றுதான்!

நதிகள் வேறுவேறு பாதையில் வந்தாலும்
ஒன்று சேரும் இடம் ஒன்றுதான்!

ஆனால் மனிதர்கள் சேரும்
இடம் எது??

ஆக தண்ணீருக்கு இருக்கும் ஒற்றுமை
தனி மனிதன் எவருக்குமில்லை
என்னையும் சேர்த்து...

ஐம்பூதங்கள் அனைவருக்கும்
சொந்தம் தானே!

ஆனால் எந்த மனிதனாவது
இந்த நெருப்பிலும் ஆகாயத்திலும் எனக்கு
பங்கு உண்டென
பறைசாற்றியதுண்டா?

முன்பெல்லாம் மனை பிரச்சனை
இப்போது அணை பிரச்சனை..

ஓஹோ..
யானைக்கும் அணைக்கும்
மதம் பிடித்துவிட்டதோ??