வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

காமவரி கவிஞர்கள் திருந்தமாட்டிங்களா?

Friday, February 01, 2013




எல்லா தமிழ் பாடலிலும் ஆபாசம் இருக்கிறது என்று சொல்லமுடியாது....

பழைய பாடல்களும் ஆபாசம் இருந்தது இலைமறை காயாய்..

இங்கே அதெல்லாம் இல்லை டைரக்ட்தான்

வைரமுத்து ரா ரா ராமையா பாடல் வெளி வந்தபோது

பாருங்கப்பா..வாழ்க்கைய எட்டுக்குள்ள சுருக்கிட்டார்னு வக்காலத்து வாங்கினேன்

வாலியின் பழைய பாடலை கேட்டவர்கள் அவரை குறை கூறினால் அடிக்க வந்துவிடுவார்கள்

ஆனால் என்ன ஆனது இப்போது?



 சில பாடலை கேட்டுவிட்டு இவரா இப்படி எழுதியது என வருத்துப்பட்டது உண்டு....

வைரமுத்துவின் வைர வரிகளை ரசிப்பவந்தான்...இருந்தாலும்...

அவர் எழுதிய சிலவரிகள் முகம் சுளிக்கவைத்தது....

ரோஜா படத்தில் "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது"பாடலில்
"இங்கு சொல்லாத இடம்கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது"என்றார்..

அதோடு விட்டாரா?குஷி படத்தில் ஆபாசத்தின் உச்சகட்டமாய்
கட்டிபுடிடா பாடலில்
"எவ்விடத்தில் கண்முழித்தோம் அவ்விடத்தில்
மெல்ல தட்டு தட்டு"என்று இச்சை கூட்டினார்

கவிஞர் வாலியை சொல்வதென்றால் அவர் ஆபாசத்தின் உச்சக்கட்டம்..

நாமெல்லாம் பெண்களை பார்த்து எப்படி இருக்கிங்கனு கேட்க கூச்சப்படுவோம்

தலைவரு
"எப்படி எப்படி சமஞ்சது எப்படினு நேரிடையாகவே மாராப்புக்குள் என்ன இருக்குனு ஒரு வீணாபோனவன் கேட்டமாதுரி கேட்டார்..

அதுமட்டுமா?அதேபாடலில்
"காஞ்சமாடு காம்புலதான் பாஞ்சதுபோல் தெம்புலதான் நீயும் மேய பாக்குற"

எப்படி ஒரு உதாரணம் பாத்தியலா?

அதே படுத்துல ஏ குட்டி பாடலில்...சே சே சொல்லவே கூசுகிறது...

"உரலு ஒன்னு அங்கிருக்க உலக்க ஒன்னு இங்கிருக்க நெல்லு குத்த நேரம் எப்போ சொல்லேன்டி என் சித்திரமே"

இதனால் தமிழ் திரையுலகிற்கு நான் சவால்விடும் செய்தியாவது..


இதேமாதுரி காமத்தின் உச்சகட்டமாய் யாரும் பாட்டு எழுத முடியாது

ஏன்..... இப்படி கவிஞர்களே?

ஆபாசம் இல்லாமல் திரைப்படம்தான் சாத்தியம் இல்லை இப்போது?பாடல்களுமா?

வைரமுத்து சார்!

நீங்கள் எழுதிய"விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு"என்ற வரிகளால் ஏற்ப்பட்ட பிரச்சனைக்கும் கேள்விக்கும் இன்று வரை தீர்வு இல்லை விடை இல்லை..


வாலி சார்!

இதைவிட எப்படி ஆபாசமாய் எழுதுவது என யோசனையா?



2 பேர் சொன்னது....:

Anonymous said...

தினசரி வாழ்வில் காமம் இல்லாத நாளே கிடையாது. அதனை திரையுலக வியாபாரிகள் பணம் பண்ண பயன்படுத்தி கொள்கிறார்கள். மானங்கெட்ட சினிமாவை நாம் பார்க்கும் போது அவர்கள் எழுவதில் என்ன தவறு?

Unknown said...

//மானங்கெட்ட சினிமாவை நாம் பார்க்கும் போது அவர்கள் எழுவதில் என்ன தவறு?///

அதுசரி..வாஸ்தவமான பேச்சு...ஆனால் நான் இப்ப படம் பாக்குறதில்லை சாமி...என்னை விட்டுவிடுங்கள்...
மானம் கெட்ட சினிமாவை பார்க்காதவர்களும்,பாட்டை கேட்காதவர்களும் உண்டே!அவர்களுக்கு வக்காலத்து வாங்கவே இந்த பதிவு

Post a Comment