வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

பள்ளிக் கூடு!

Wednesday, January 04, 2012



ஒரே கூட்டில் வாழ்ந்த
பறவைகள் இன்று
பிரியப்போகின்றன..
இரைக்காகவோ இல்லை
இரையாகவோ??

உண்மையான நட்பிற்கு
உதாரணமாய் நம்
அனைவரையும் காலம்
 அடையாளம்காட்டியது!

நண்பனே!
என் நினைவுகள்
மறக்கமுடியாமல்
மறுதலித்தது உங்களைதான்!

தோழியே!
நம் இருவருக்கும்
இடையில் மட்டும்தான்
நாகரீகத்தின் கற்பு
நசுக்கப்படாமல் இருந்தது!

மறதிக்கு விதிவிலக்கு
பள்ளிக்கால நினைவுகள் மட்டும்..

அந்த மச்சான் மாப்பிள்ளை
நண்பர்களின் விளித்தல்கள்
எப்போதும் காதில்
எதிரொலிக்கும்!

மேகத்திலிருந்து
மழைத்துளிகளாய் சிதறிவிட்டோம்!
இனி மீண்டும் சேருமிடம் எது?

உள்ளங்கை ரேகைகள்போல்
ஒன்றாய்தானிருந்தோம்
அச்சத்தீர்க்க ரேகைகளாய் ஏன்
அன்னியமானோம்?

நாம் ஒரே வானில் முழு
நிலவு!
நட்ச்சத்திரங்களாய்
நம்மை பிரித்தது எது?


ஒருவேளை நமக்கு
இது பிரிவு இல்லையோ?


சூரியன் பிரிவது
இன்னொரு விடியலுக்குத்தானோ?


இப்படித்தான் என்னை
தினமும்
தேற்றிக்கொள்கிறேன் நண்பர்களே!


ஒரே வெள்ளத்தில்
அடித்துச்செல்லப்பட்ட செடிகொடிகளா
நாம் அனைவரும்?

சரிதான்..
பிரிவுகூட சிலநேரம்
பிரியமனதுதான்!

கண்கள் பிரிந்திராவிட்டால்
பார்வை இல்லை!

பாதம் பிரிந்துவிட்டால்
பயணம் இல்லை!

ஆணும் பெண்ணும் பிரிந்திராவிட்டால்
அன்பே இல்லை!

அதனால்தான்
அனைவரும் பிரிந்து விட்டோமோ??


8 பேர் சொன்னது....:

சசிகலா said...

இப்படித்தான் என்னை
தினமும்
தேற்றிக்கொள்கிறேன் நண்பர்களே!
உண்மைதான் அருமை

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******1.
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
***********************************


2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.

Unknown said...

உங்கள் வருகைக்கு நன்றி சசிகலா மேம்!பின்னூட்டத்திற்கு நன்றி!அடிக்கடி வாங்க

Subramanian said...

பிரிவின் வலியையும், பிரிவின் சுகத்தையும் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.
//ஆணும் பெண்ணும் பிரிந்திராவிட்டால்
அன்பே இல்லை!//
அருமையான வரிகள். தொடருங்கள் சகோதரரே!

ஸாதிகா said...

கவிதையும் அருமை..கவிதைக்கு இட்ட தலைப்பு அருமை.தொடருங்கள் சகோ.

Unknown said...

நன்றி சுப்பிரமணியன் சார்!அது ஒரு அசைக்கமுடியாத மறுக்கமுடியாத உண்மைதானே!

Unknown said...

ஸாதிகா மேம்..நன்றி! இரண்டாவது தடவை ப்ளாக் பக்கம் வந்துருக்கிங்க..உங்கள் ஆதரவை எப்போதும் விரும்புகிறேன்!வேண்டுகிறேன்!

Radha rani said...

கவிதையும் தலைப்பும் அருமை சகோ.

Post a Comment