வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

என் அருமை மகள்கள் சுமையா,சஃப்ரீன் ஃபாத்திமா...

Sunday, October 31, 2010



பெயரளவில்தான் நீ சுமையா
எங்களுக்கு என்றும்
இருந்ததில்லை சுமையாய்...

நீ காயப்படுத்துவதற்காகவே
காத்திருக்கிறது என் தேகம்
பூ தாக்கியா இரும்பு காயப்படும் என் மகளே!

ஒருவிதத்தில் நீ இருக்கிறாய்
எப்போதும் என் இமையாய்..


ஒருபிடி எழுத்துக்களால் ஊருக்கே
கவிதை வெளிச்சம் தருபவன் நான்.

உனக்கொன்று இல்லாமலா?
நீ ஒரு நதி
சில இலைகளையும் கிளைகளையும்
நதிகள் அடித்துச் செல்வதுண்டு
என்னை ஆணிவேரோடு
அடித்துப் போனது நீயே என் மகளே!

உனக்குத் தெரியுமா?
நான் உன் நினைவுகள்
எனும் முடி சுமக்கும்
கவரிமான்!
உன் முத்தத்தின் ஈரம்
எரிமலையையே நனைத்துவிடுமே
என் உள்ளத்தில் எரியும்
சோகம் எம்மாத்திரம்!

சிரி!
வாயில் நீர் ஒழுக சிரி
அலைகளின் சிரிப்புதான் நுரை!

சிரி கண்ணில் நீர் ஒழுக சிரி
மேகத்தின் சிரிப்புதன் மழை!

வா வந்தெனை கட்டிக்கொள்!

முத்தம் கொடுத்தே
முகத்தை அழி!

கசங்கிவிடாமல் என்னை பிழி!

என் தெருப்பக்கம்
தென்றல் இல்லாத பொழுது மூச்சு விடு!

நீ திடீரென் சிரிக்கிறாய்..

மின்னல் தோன்றி மறைகிறது

எங்கும் இருள் படர்கிறது
ஓ..நீ கோபம் கொள்கிறாய்!

என் கைகளில் தவழும் பிஞ்சு மேகமே

உன் முத்தத்தால் நீளும்
என் ஆயுள் கொஞ்சம் தங்கமே...


13 பேர் சொன்னது....:

ஆமினா said...

நல்ல கவிதை அண்ணா!
வளமான எதிர்காலம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக உண்டு! வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி ஆமினா!

உன் வருகையால் நான் இதயம் சிலிர்த்தவனாகிவிட்டேன்

ஆமினா உன் வார்த்தைகள் என் குழந்தைகளுக்கு ஆமின் ஆகட்டும்

Unknown said...

ஷேக் அண்ணா.. நல்லதொரு கவிதை. குழந்தை நீண்ட ஆயுளோடும் நல்ல நிலைமையிலும் வாழ இறைவன் என்றும் துணையிருப்பார். உங்கள் கவிதைப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி ராதா! இறைவனின் ஆசியும் உன்னைபோன்ற தங்கைகளின் அன்பும் இருக்கும்போது கண்டிப்பாக என் குழந்தைகளும் நானும் நன்றாக இருப்போம்!

தொடர்ந்து என் ப்ளாக்கிற்கு வா ராதா!

தவமணி said...

கவிதை எண்ணங்களின் பாலம்,
எண்ணங்கள் செயல்களின் பாலம்,
செயல்கள் வாழ்க்கையின் பாலம்,
வாழ்க்கை உங்கள் குழந்தைகளின் எதிர்காலம், கவிஞரின் செல்லங்களின் வாழ்க்கை ஒளி வீசும் பகலவன் போல் பிரகாசிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.

இமா க்றிஸ் said...

சுமையாக்குட்டி ரொம்ப அழகாக இருக்கிறாங்க ஷேக்.

அவர்கள் எதிர்காலம் பிரகாசமாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன் இமா

Unknown said...

நன்றி தவமணி அண்ணா!

அவ்வபோது உங்கள் விவசாயம்போல் என் ப்ளாக்கையும் கவனித்துக் கொள்ளுங்கள்..

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தமைக்கு நன்றி அண்ணா!

Unknown said...

இமா ஆசிரியர் நலமா?எப்படியோ கெள்வி பட்டு இந்த மாண்வனையும் மாணவனின் குழந்தையையும் வாழ்த்திவிட்டு போன உங்களை வாழ்த்த என் தலைக்கு இன்னும் நரை வர வில்லை!

பூமிக்கு போய் யார் மாலை போடுவது?

இலக்கணத்திடம் போய்
இந்த ஆயுத எழுத்து செய்வது யாது???

இமா க்றிஸ் said...

;)

elayarani said...

அருமை மகளுக்காக மிக அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள் அன்புடன் இளையா.G

Unknown said...

நன்றி இளைய ராணி..இவ்வளவுதூரம் எனக்காக வந்து பதிவிட்டமைக்கு நன்றி!

Dr.Dolittle said...

கவிதைக்கே கவிதை ..... ரசித்தேன் , நெகிழ்ந்தேன் .

Unknown said...

dr.dolittle.thank u so much

Post a Comment