சிந்துபாத் கதைமாதுரி இப்ப எல்லாம் கற்பழிப்பும் தொடர்கதையா போச்சு...
சினிமாக்களில்கூட சிலசமயம் அதுதான் ஹைலைட்..
எ.கா..பிரியங்கா திரைப்படம்
அந்தசமயங்களில் பலவித சர்ச்சையான பேச்சுக்கள்,விவாதங்கள்,பட்டிமன்றங்கள்....தேள்கொட்டின இடத்தில் ஆசிட்விட்டமாதுரி...
என்னுடைய பெண் நண்பர்கள் "பெண்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடு?எங்களுக்கு ஆடையில்கூட உரிமை இல்லையா?"என நான் அவர்களிடம் ஆடைபற்றி பேசும்போது வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள்...
மாட்டுவண்டி மாறி விமானம் வந்தது நேரத்தின் நாகரீகம்!புறா போய் செல்போன் வந்தது அஞ்சல்தலையின் நாகரீகம்!
சுருங்கி போவதுதான் நாகரீகம் எனில்..
ஆடை சுருங்கிபோவது எந்த நாகரீகம்?

எப்போது காற்று அடிக்குமோ என பயப்படும்படியான குட்டைபாவடை..இரண்டுபக்கமும் பார்த்துக்கொள்ளலாம் எனும்படியான வெங்காயத்தோல் ஆடை...
என்ன இதெல்லாம்???
ஆடை விசயத்தில் சில ஆண்களும் அப்படித்தான்..பாதி பட்டக்ஸ் தெரியுற அரை ட்ரவுஸர்ஸ்...சோப்புநுரையில் செஞ்சதுபோல் வேஸ்டி சட்டைகள்??ஏன்?ஏன் இந்த கொலைவெறி??
ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு...
உள்ளாடையோடு எங்கேவேண்டுமானாலும் நிற்கலாம் என்பதுபோன்ற உடலமைப்பு ஆண்களுக்கு
தொப்புள்கூட தெரியுதா என கவலைபட்டு மறைக்ககூடிய உடலமைப்பு பெண்களுக்கு...

கண்ணாடி, ஜரிகை,ஜன்னல் ஆடைகள் கற்பழிப்புக்கான பத்திரிக்கையில்லா அழைப்பு!
ஒருவீடு இருக்கு.முக்கியமான பொருள் இருக்கு...எங்களுக்கு சுதந்திரம் இல்லையாவென யாரும் பூட்டாமல் வெளியே போக முடியுமா?அது திருடனுக்கான அழைப்பு இல்லையா?
பெண்களின் கற்பு அப்படித்தான்...
பெண்ணின் கற்பு கண்ணாடி பெட்டகம்...
அது உடைந்து விடுமோ என்கிற பயத்தில்தான் அதன்மீது இத்தனை கட்டுப்பாடுகள்!
அதனைச்சுற்றி பொதியப்பட்ட பாதுகாப்பை அது சுமையாக நினைத்தால் நஸ்டம் பெட்டகத்திற்கே!
கண்ணாடி பெட்டகம் பெற்றோரிடமிருந்து கைமாறி கணவனிடம் வருகிறது...எங்கே பெட்டகம்போனாலும் அது உடையக்கூடிய பொருள் என்பதால் அதன்மீதான பாதுகாப்பு சுமை அகன்றதா இல்லை!
இதில் சுதந்திரம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை...
சுதந்திரம் இல்லையென் யார் சொன்னது?
கல்வியை எடுத்துக்கொண்டால் அதில் பெண்களுக்கே முதலிடம்...
விவசாயத்திலிருந்து விண்வெளி வரை கால் வைக்காத இடமே இல்லை...
பெண்களை அடுப்புபூதங்கள் என்று கூறியவனை தோண்டி எடுத்து தூக்கில் போட்டாச்சு..
சுதந்திரம் இல்லாமலா வெற்றியின் சுவர் ஏற முடிந்தது பெண்களால்?
ஆக சுதந்திரம் என்பது ஆடையில் இல்லை...
சரிதானே?
Tweet | ||||||
6 பேர் சொன்னது....:
சரியாக சொன்னீர்கள்.
ஆடை என்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உள்ளே இருப்பது தெரியாமல் இருக்க வேண்டும் என்பது வரை சரி. ஆனால் கற்பழிப்புக்கு காரணமாக ஆடையை குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ரேகன் சார்..வருகைக்கு நன்றி!
மறந்தும் இருந்தும் விடாமல் அடிக்கடி வாங்க
/// ஆனால் கற்பழிப்புக்கு காரணமாக ஆடையை குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.///
விஜய் சார் நன்றி தாங்களின் வருகைக்கு,
அப்படியா?ஒரு பீட்ச்சில் எல்லாம் தெரியும்படி ஒரு பெண் ஆடை அணிந்து சன்பாத் எடுப்பதாக கொள்வோம்...
நாகரீகமான கண்கள் அதை பார்த்தும் பார்க்காமலும் போய்விடும்...ஆனால் தவறான கண்கள் அதை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ரசிக்கும்..ரசிப்பின் உச்சக்கட்டம் சூழ்நிலையை பொருத்து கற்பழிப்புக்கும் கூட்டிச்செல்லும்..முழுக்க முழுக்க ஆடைதான் கற்பழிப்புக்கு காரணம் என சொல்லவில்லை..அதுவும் ஒரு முக்கிய காரணம் என் சொல்கிறேன்...சரியா?
உங்கள் கண்கள் ஆரோக்கியமானவை..அதனால்தான் அது கற்பழிப்பு வரை கூட்டிச்செல்லாது என்கிறீர்கள்!
////பெண்களை அடுப்புபூதங்கள் என்று கூறியவனை தோண்டி எடுத்து தூக்கில் போட்டாச்சு..///////
எப்பங்க இது யாரு அது ?
சங்கர் ஜீ
வருக!வருக!
வருகைக்கு நன்றி!
//எப்பங்க இது யாரு அது ?///
அட கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை புகழவேண்டும் எனும் உற்சாகத்தில் எழுதியது அது...
தவறில்லை என நினைக்கிறேன்
Post a Comment