
காதல் என்னை பிழிந்தபோது
வழிந்தவை இந்த
வரிகள் அனைத்தும்...
நிலாவை
உன் கன்னத்தின் பொட்டாக
நட்சத்திரங்களை
உன் தலையிலிருந்து உதிர்ந்த மல்லிகையாக்க
காதல் எனை தூண்டுகிறது..
உன் முகத்திற்கு பசைதடவி
என் நினைவுகளில் ஒட்டியது யார்?
மாலைவரை நீளும் நிழலைப்போல
உன் நினைவை நீட்டிப்பது எது??
உதடுகள் வழியாக இதயத்துக்குள்
கைவிட்டு
பிசைந்ததுபோல்
பிரசவ வலி!
நீ தள்ளியிருக்கும் போது
தண்டவாளம்!
தோளில் சாய்ந்தால்
பைசா நகரத்து கோபுரம்!
உருகுகிறதே!
பனிக்கட்டியே நீயும்
காதல் செய்கிறாயோ?
காதல் வரைபடத்தில்
இந்தியாவைபோல் நீ
இருக்க எனை மட்டும்
இலங்கையைபோல் தொங்கவிட்டதேனடி?
வேண்டாம் வேண்டாம்..
நீ தள்ளியே இரு!
நெருங்கும்போது
காமமும்
காந்தமும் ஒன்றே!
தூரமாய் இருந்துகொண்டே
தலைவருடும் மரம்போல் எனை
இமைகாற்றால் வருடு!
என்னைச்சுற்றி இருளும்போது
கொஞ்சம் சிரித்துவிட்டு போ!
அதிலேயே
ஆயிரம் வருடம் வாழ்ந்து இறந்து போவேன்!
Tweet | ||||||
0 பேர் சொன்னது....:
Post a Comment