வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

படித்து உறைந்துபோன கவிதை..

Friday, February 15, 2013


சமீபத்தில் நான் படித்து உறைந்துபோன கவிதை..



எனக்கு பசித்த போது...
சமைத்து போட வேண்டும்...!
குளிப்பதற்கு சுடுநீர்...
வைத்து கொடுக்க வேண்டும்...!
அழுக்கான உடையை...
துவைத்துப்போட வேண்டும்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் ஆண்மைக்கு வாரிசாக...
பிள்ளை பெற்றுப் போட வேண்டும்...!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு...
அடங்கிப் போக வேண்டும்...!
என் பெற்றோருக்கும்...
ஏவல் செய்ய வேண்டும்...!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்...
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் குறி விரைத்துக் கொண்டால்...
உன்னிடமும் வரும்...
தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்...
என் குறிக்கு கற்பு கிடையாது...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

மொத்தத்தில்...

எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது...!
வலிமை இருக்கிறது...!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது...!
உன்னைவிட நானே உயர்ந்தவன்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

இந்த கவிதை படித்தபோது பயங்கரகோபம் எனக்கு..பதிலுக்கு நாமும் எழுதவேண்டும் என கைகள் துடித்தது..ஆழ்ந்து சிந்தித்தபோது ஒரு வகையில் சரிதான் என தோன்றியது....

ஆண்கள் என்றாலே ஆதிக்கம் கொண்டவன் என்பதே சில ஆண்களின் கருத்து..

அதற்கு இந்த கவிதை ஒரு சூடு

அவர்களையும் மதிக்கவேண்டும்...பெண் என்பவளை ஒரு போதையாக அல்லாமல் பேதையாகவும் பார்க்க வேண்டும்...

ஆனால் இந்த கவிதை எழுதியவரிடம் ஒன்று கேட்க ஆசை படுகிறேன்..

எல்லாம் சரிதான்..ஆண்களை ஆதிக்கம் செய்யும் பெண்களும் அதிகம் உண்டே?
அதற்கு இந்த கவிதையில் விடை இல்லையே?

எது செய்தாலும் தன்னிடம் கேட்டுவிட்டுதான் செய்ய வேண்டும்..பெற்றோருக்கு உதவி செய்தலிலும் சரி...மற்றவருக்கு உதவி செய்தலிலும் சரி...இப்படி நினைக்கும்  நடக்கும் பெண்கள் அதிகம் உண்டே  நாட்டில்!

2 பேர் சொன்னது....:

Aathiga Tamilan said...

Kavithai is good.
But against your Koran.

I know neenga thiruntha maateenga. mokkai koranai vida mateenga. What to say to you? No use.

Have you ever thought why you are all hated world over?

I give up.

Unknown said...

எந்த இடத்திலாவது குரான் பெண்களை அடிமை படுத்த வேண்டும்,கொடுமை படுத்த வேண்டும் மதிக்ககூடாது என சொன்னதா?
உண்மை அதுவல்ல...

இஸ்லாமியர்களை எல்லோரும் வெறுக்கிறார்களா?யார் சொன்னது?அமேரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கத்தில் இஸ்லாம் முதலிடம்...

நீங்கள் இஸ்லாத்திற்கு அகைன்ஸ்ட்..அதான் உண்மை..

அதனால்தான் மார்க்கம் சம்பந்தமாக நான் பேசியதை சம்பந்தமே இல்லாமல் இங்கே கொண்டு வருகிறீர்கள்..

Post a Comment