
கமல் அய்யா சொல்வதை பார்த்திங்களா?
அவர் பார்வையில்....
தான் அணிந்திருக்கும் ஜட்டியை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்து ஆபாசமாய் நடிப்பது குற்றமில்லை..
உதாரணம்:குருதிபுனல் பட சீன்(தமிழ் படத்தை ஹாலிவுட்டிற்கு உயர்த்துகிறாராம்!)
தேசத்தந்தை காந்தியை கொன்றது யார் என்ற உண்மையை வெட்டவெளிச்சமாக்கிய ஹேராம் படத்தில்கூட உடலுறவு காட்சிகளை இணைப்பது தவறில்லை..
திருமணம் செய்யாமலேயே நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது குற்றமில்லை...
மரண தண்டனை தவறு என்றால்???
டெல்லியில் கற்பழிப்பு செய்தவனுக்கு பாராட்டுவிழா நடத்தலாமா?
ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வல்ல அப்படி என்றால் மாலை அணிவித்து மரியாதை செய்தால் தகுமா.. யார் ஒரோவர் அப்படி கூறுகிறாரோ அவர்களது குடும்பத்தில் இப்படி ஒரு கேவலம் நடந்தால் இப்படி தான் பேசுவார்களா.. இந்த குற்றத்திற்கு கொடூரமான தண்டனை இல்லாததால் தான் நம் நாடெங்கும் இந்த அசிங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது..தண்டனை குடுக்காமல் நாமே அது தொடர்ந்து நடக்க காரணமாக கூடாது... குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க கூடாது என்று சொல்பவரும் குற்றவாளிகள் தான்...
கமலா இப்படி பேசுவது...??? சினிமாத்துறையில் ஓரளவு அறிவும், சிந்திக்கும் திறனும் கொண்ட கமலா இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது. குற்றம் புரிந்தவனுக்கு தரும் தண்டனை எப்படி குற்றமாகும். தண்டனை என்பது மற்றவர்கள் குற்றம் செய்யாமல் தடுக்க, அடுத்தவரை குற்றம் செய்யாமல் எச்சரிக்க வைக்கும் ஒரு செயல். இந்த 5 கயவனுக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் குற்றம் செய்ய நினைப்பவனுக்கு பயமிருக்கும். அதைவிட்டு தண்டனை கொடுப்பதும் ஒரு குற்றம் என்று பிதற்றினால் எப்படி பயம் வரும். என் சகோதரி என்று வார்த்தைக்கு சொன்னால் போதாது.. உண்மையிலேயே சகோதரியாக நினைத்தால் இப்படி ஒரு வார்த்தை வராது. சகோதரர் மோகன் அவர்களே, இதுபோல் குற்றம் செய்தால் கடுமையான தண்டனை என்பது நிரூபனமானால் எப்படி 1000 பேர் குற்றம் புரிவான். தயவுசெய்து சிந்தியுங்கள்.. இந்த வெறி நாய்களை மக்கள் முன்னில் தூக்கிலிட்டு, அதை அனைத்து மீடியாக்களும் மக்களுக்கு கொண்டு சென்றால் தான், குற்றத்தின் சதவீதமேனும் குறையும், அதைவிடுத்து முற்போக்காக சிந்திக்கிறேன்... வித்தியாசமாக கருத்து சொல்கிறேன் என்று எதையாவது உளறினால்... நாளை நிஜமாகவே நம் சொந்த சகோதரிக்கும் இந்த நிலை
வரும்
தூக்கு தண்டனை என்பது சட்டரீதியான கொலை என்றால், லத்திசார்ஜ்&கண்ணீர் புகை இதெல்லாம் சட்டரீதியான வன்முறை என சொல்லலாமா? தண்டனைகள் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து பார்க்கவேண்டும். தண்டனை கொலையாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதில் என்ன தப்புன்றேன். சில நேரங்களில் கமல் முற்போக்காக சிந்திக்கிறேன் பேர்வழினு பிற்போக்குத்தனமான விஷயங்களை சொல்கிறார். சும்ம என் தங்கச்சி, என் தம்பிகள்னு டயலாக் விடுறதுக்கு இது ஒன்னும் திரைப்படம் இல்லை. கொடுத்து பார் தூக்குதண்டை குற்றங்கள் குறையுதா இல்லையானு!!
இந்திய நாட்டின் தலைநகர் டில்லியில் கடந்த 16-ஆம் தேதி இரவு, ஓடும் பஸ்ஸில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியை ஆறுபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு நிலையை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக டில்லியில் அதிகமாக நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து சமீபத்தில் இயக்குனர் அமீர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி பேசிய கமல் “ டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் அவமானத்திற்குரிய செயல். ஆனால் இந்த தவறுக்கு தூக்கு தண்டனை தீர்வாகாது. ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வு இல்லை. தூக்குதண்டனையை சட்டரீதியான கொலை என்றும் சொல்லலாம். தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்வதால் இந்த கொடூரமான குற்றத்தை நினைத்து நான் வருந்தவில்லை என அர்த்தம் கிடையாது.
சம்பவம் நடந்தது என்னுடைய பேருந்து. நடந்த இடம் எனது தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண் என் சகோதரி. தவறைச் செய்தவர்கள் என் சகோதரர்கள். இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார். தலைநகர் டில்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தை எதிர்த்து பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராடத்துவங்கிவிட்டதால் டில்லி முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பள்ளி மாணவி புனிதாவின் பாலியல் பலாத்கார கொலையையும், டில்லி சம்பவத்தையும் கண்டித்து சென்னையிலும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்துகொண்டனர்.