வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

மெல்ல மெல்ல சாவு

Friday, January 18, 2013





அந்த கண்மை இருட்டு...

நட்சத்திரங்களை காவலுக்கு வைத்துவிட்டு நிலா ராணி ரகசியமாய் ஓய்வெடுக்கும் தனிமையான் நேரம்

நிசப்தம்....

டிக்...டிக்...டிக்....

ரகுநாத்தின் கைக்கடிகார சத்தமும்,காலடி சத்தமும் அவனுக்கே பயத்தை உண்டாக்கும்..

அவனுக்கோ பயம் இல்லை..மனம் முழுவதும் காளிதாஸை கொலை செய்யும் எண்ணம் மட்டும் வியாபித்திருந்தது

என்னையா ஏமாற்றுகிறாய்?பிசினஸில் லாபத்தில் பாதி தருவேன் என்று சொன்னவன்...இன்று ஆகோ ஓகோ என்ற நிலையில் அரசியல்வாதியாய் வார்த்தை தவறி விட்டான்.....நானும் அந்த பைத்தியக்கார ஏமாளி மக்களில் ஒருவந்தான் என்றாலும் அவர்களை போல் இல்லை.


நயவஞ்சகர்களை கசாப் கடைக்கு காவு கொடுக்க வேண்டும்..அவர்கள் இரத்தத்தில் தாகம் தணிக்கலாம் என நினைப்பவன் நான்..

இதோ வந்து விட்டேன்....இன்னும் சில நிமிடங்கள்தான்...

உன் நரம்புகளில் நூடுல்ஸ் சாப்பிடும் சமயம் வந்து விட்டது...

நீ சாகும்போது உனக்கு எதிரே உள்ள ஏதோ ஒன்றை வெறிக்க பார்த்தவாறே கண் திறந்த நிலையில்  சாக வேண்டும்...

இதோ இன்னும் கொஞ்ச நேரம்தான் அருமை எதிரியே! கொஞ்ச நேரந்தான்!

இப்போது அவன் நடையில் வீடு நெருங்க நெருங்க வேகம் கூடியது..


கை வியர்த்தது(முதல் கொலையாக இருக்கலாம்)


நிறைய சினிமா அல்லை ராஜேஸ்குமார் நாவல் படித்திருப்பான் போல...


அவன் அறையை குறுக்கு வழியில் வந்தடைந்தான்...

இதோ தர்மத்தின் கனவு முதல் முறையாக பலிக்கபோகிறது..

சுதந்திரத்திற்கு பின் காணாமல் போன நீதிதேவதை சுற்றுலா முடிந்துவிட்டு தீர்பளிக்க திரும்ப வருகிறாள்!

கதவை ஓசை இல்லாமல் திறந்தான்...

டிக் ..டிக்...டிக்....

 துப்பறியும் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவ கையுறை அணிந்தான்..

செத்து போடா நாயே! கொஞ்சம் கொஞ்சமாய் செத்து போ!

தூக்கில் போடுவதுபோல் சில நொடிகளில் போய்விடாதே...

காளிதாஸை நெருங்கினான்...கழுத்துப்பகுதியை குறிவைத்து கத்தியை ஓங்கிய சமயத்தில் வெளியே....



குநாத்திற்கு பயங்கர கோபம்...கோபத்தில் கையிலிருந்த ராஜேஸ்குமார் நாவலை தூக்கி தூரமாய் வீசி எறிந்தான்...

காரணம்....

நாவலின் அடுத்த பக்கம் காணவில்லை...மார்க்கெட்டில் பத்து ருபாய்க்கு நாலுனு வாங்கினால் இப்படித்தான் இருக்கும்...

பார்த்து வாங்க வேண்டாமா?சொன்னது அவன் மனசாட்சி இல்லை

விசயம் தெரிந்த அவள் மனைவி சுகுனா

ஆனால்...ஆனால்...

கிழிக்கப்பட்ட பகுதி அவள் மகள் கீர்த்தனாவல் கப்பலாய் உருப்பெற்று சேற்றில் மிதந்து கொண்டிருந்தது வெளியே....




0 பேர் சொன்னது....:

Post a Comment