இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...
நீங்கள் ரசிகர் மன்றம் வையுங்கள்..வைக்காமல் போங்கள்...
அதற்கு இப்படியா?கடவுள் ரேஞ்சிக்கு அவர்களை வைப்பது??.

இன்றளவில் தேசத்தலைவர்கள்
வசிப்பது புத்தகங்களில் மட்டுந்தான்
மகாத்மா!
ஆக்ஸ்ட் பதினைந்தில்
அனைவர் நினைவிலும் வருவாய்
மீண்டும் வர வேண்டுமானால்
மற்றொரு ஆகஸ்ட்தான் வரவேண்டும்!
பாரதக் கவி
பாரதியின் நிலைமை தெரியுமா?
ஈமச்சடங்கின்போது
உடலில் இருந்த விரல்களின் எண்ணிக்கையில்கூட
ஊர்வலத்தில் ஆட்கள் இல்லையாம்!
ஒருவேளை....
தீபாவளி வந்தால்
சிறுவர்கள் வெடிக்கும் துப்பாக்கிப்பார்த்து
சுபாஸ் சந்திரபோஸை
நினைவுகூறும் வாய்ப்பு உண்டு!
தலைகுனிந்து கிடக்கும் இவர்களின்
தலைநிமிரவா பாடு பட்டீர்கள்?
நிமிர மாட்டார்கள்
இவர்கள் பைசா நகரத்து கோபுரங்கள்...
தலைகுனிவதே தலைக்கழகு என்ற
தலைக்கணம் பிடித்தவர்களுக்கு
இறையான்மையின் இலக்கணம் விளங்காது!
இந்த நயவஞ்சகர்களுக்கு
நடிகன் மற்றும் காதலியின் பிறந்தநாள்
நக இனுக்கில்..
உங்கள் பிறந்த நாள் கேட்டால்
உலகவரைபடத்தில் தேடுகிறார்கள்.
ஒரு நடிகனின் சிலைக்கு ஊத்தப்பட்ட
பாலாபிஷேகம் பூனைகளுக்குதான் மிச்சம்
ஆனால்..
காமராஜரின் சிலையை பாருங்கள்
காக்கைகளின் எச்சம்!
கடவுளை நிராகரித்து விட்டு
ஒரு திரைப்படத்தின் வெள்ளிவிழாவிற்காக
கல்சோறு சாப்பிடும் கல்நெஞ்சக்காரர்கள்!
இவர்கள் மொத்த பகல் கனவுகளின்
குத்தகைகாரர்கள்!
வீட்டிலிருந்துகொண்டே வேலையில்லை எனும்
சேலைஉடுத்தாத சேவல்கள்!
இவர்களின் நீளமான சேமிப்பு
தாடியும் சில கவிதைகளும்...
கவலைப்படாதீர் காமராஜரே!
என் தேசத் தலைவர்களே!
தலைக்குமேல் பறக்கும்
கழுகுகளின் எண்ணிக்கையை வைத்தா
பெருந்தலைவர்களின்
பிணத்தின் மதிப்பை எடை பார்ப்பது?
எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும்
நட்சத்திரங்கள் பூமிக்கு
வெளிச்சம் தர முடியாது!
நீங்கள் இந்த இருண்ட பிரதேசம் எனும்
தேசத்திற்கான நிலாக்கள்!
உடலில் உயிரணுக்கள் எத்தனையிருப்பினும்
உயிர் உண்டாக்குவது ஒன்று மட்டுந்தானே!
சுதந்திரத்தின் உயிர் உண்டானது
உங்களின் அணுக்களில்தானே!
சுதந்திர இந்தியா இருப்பதென்னவோ
அறுபத்திமூன்றாயிரம் அடி சிகரத்திதான்
ஆனால் ....
எதற்கும் பணியாத சில
எருமை மாடுகளால்
சிகரம் ஏற முடியாது என் தந்தைகளே!
Tweet | ||||||
0 பேர் சொன்னது....:
Post a Comment