வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

குரங்கிலிருந்து பிறந்தானா?குரங்கை மனிதன் பெற்றானா?

Thursday, February 21, 2013




குரங்கிலிருந்து மனிதான் வந்தான் என டார்வின் ஒருகாலத்திலும் ஆதாரத்தோடு சொல்லவில்லை..அது அவரின் ஊகம் மட்டுமே1

ஊகத்தை வைத்து நம்மால் சொல்ல முடியாத கதைகளா?அதுல இதுவும் விதிவிலக்கல்ல

எல்லா குரங்கு மூஞ்சியையும் பாருங்கய்யா

மனுஷன் முகத்தையும் பாருங்க..

ஏதும் வித்தியாசம் தெரியுதா?

ஒருத்தனைபோல ஒருத்தன் மனிதனில் இல்லை..குரங்கு ஒரே அச்சில் வார்த்த முகம்....எப்படி மனது வந்தது அப்படி சொல்ல ??

இது உங்களுக்கே அடுக்குமா?

இதை அருமை சகோதரர்பி .ஜைனுல் ஆப்தீன்   எப்படி விளக்குகிறார் பாருங்கள்;





பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன்தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் ் கொள்கையைச் சிலர் ஏற்றி போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமே ஆகும்.சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை.

எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம். அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத் தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு அதிக அளவு பொருந்தி போகிறது. அநேகமாக எதிர் காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும், அல்லது முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்த்த்துக்கு நெருக்கமாக உள்ளது என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்த்த்தில் இருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்தில் இருந்து வேறு பட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்த கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் தகப்பன் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ சோதனை மூலம் 'இவன்தான் தந்தை ' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தை கணக்கில் கொள்வதில்லை.

அதே போல் மனிதனுக்கு மாற்று இருதயத்தை வேறு உயிரினங்களிலிருந்து பெற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்த போது ஆச்சரியமாக பன்றியின் இதயம் பொருந்தி போவதை தற்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இதிலும் மனிதனின் இதயம் குரங்கோடு ஒத்துப் போகவில்லை.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையில் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டான். குரங்கின் மரபனுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப் பட்டிருந்தாலோ வேறு எந்தப் பிராணியின் மரபணுவும்மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை. இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டு பிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்ரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டனர்.

இதே போல் யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

ஒட்டக சிவிங்கியின் கழுத்து ஏன் நீண்டது?

போன்றவற்றிர்க்கு எல்லாம் டார்வின் என்ன பதில் வைத்துள்ளார்?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா?பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்? தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்: அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கு டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கிறது.

மனிதனின் இரத்தம் இதயம்' சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகள ும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும் எந்த இனத்தில் இருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வினின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

5 பேர் சொன்னது....:

Anonymous said...

அறிவியல் ரீதியாக நிரூபிக்கவில்லை என்பது நிச்சயம் பாமரத் தனமான கருத்து, டார்வினிய கோட்பாடு பரிணாமவியலை விளக்கியது, ஆனால் டார்வினியம் தான் பரிணாமவியல் இல்லை. பரிணாமவியல் ஆய்வுகள் கடந்த நூறு ஆண்டுகளில் எங்கோ சென்றுவிட்டது. டார்வினைக் கடந்து கோல்ட்வினின் நிறுத்திய நிலைத் தன்மை, பின்னர் மரபணுவியல், பரிணாம உளவியல் எனப் பல்வேறு பிரிவுகளாக வளர்ந்து விட்டன, அவற்றுக்கான ஆதாரங்களாக லட்சக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் வந்துவிட்டன. வெறுமனே விக்கிபீடியாவில் பரிணாமத்தை படித்து விட்டு பிஜே போன்றோர் வைக்கும் வாதங்கள் நகைப்புக்குறியது. நிச்சயம் பரிணாமம் முற்றாக பொய் எனில் ஒரு ஆய்வுக் கட்டுரையை எதாவது ஒரு பல்கலக் கழகத்தில் சமர்பியுங்கள், நோபல் பரிசுக் கூட கிட்டலாம்... அத்தோடு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என கூறுவது பரிணாமவியலில் பெரும் அபத்தம், குரங்குக்கும், மனிதனுக்கும் ஒரு பொது மூதாதையர் இருந்தது, அதன் கிளைகளே இரண்டும், இது தான் உண்மை ... சந்தேகம் இருந்தால் மேலும் விவாதிக்கலாம். ஆனால் விவாதத்தில் பங்கேற முன் சற்றே பரிணாம உயிரியலைக் குறித்து ஆழமாக வாசியுங்கள் .. நன்றிகள் !

Unknown said...

சகோதரா இக்பால்!வருக!

//நிச்சயம் பரிணாமம் முற்றாக பொய் எனில் ஒரு ஆய்வுக் கட்டுரையை எதாவது ஒரு பல்கலக் கழகத்தில் சமர்பியுங்கள், நோபல் பரிசுக் கூட கிட்டலாம்... ///

அதைத்தான் நானும் கேட்கிறேன்...குரங்கிலிருந்து மனிதன் பிறந்ததை நீரூபிக்க ஆய்வு கட்டுரை சமர்பிக்கப்பட்டதா?

//அத்தோடு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என கூறுவது பரிணாமவியலில் பெரும் அபத்தம், குரங்குக்கும், மனிதனுக்கும் ஒரு பொது மூதாதையர் இருந்தது, அதன் கிளைகளே இரண்டும், இது தான் உண்மை ... சந்தேகம் இருந்தால் மேலும் விவாதிக்கலாம். //

இதைவிட காமடி உலகத்தில் உண்டா தலைவா?நாங்கள் பரிணாமவியல் இந்த விசயத்தில் பொய்யாகிபோனதால் உள்ளதை உள்ளபடி பார்த்தோம்.

ஆதாம் ஏவாளிடமிருந்தே மனித இனம் தோன்றியது என்பதே அசைக்கமுடியாத உண்மை...

குரங்கு நம் தந்தை என்பது நமக்கு சிரிப்பாக இல்லையா?இதையே ஆதாமை தந்தை என சொல்லிப்பாருங்கள்....வித்தியாசம் தெரியுதா?


எனது கேள்வி…
மனிதன் குரங்கில் இருந்து தோற்றம் பெற்றிருந்தால், அதாவது குரங்கின் பரிணமம் என்றால், எவ்வாறு இன்றும் பல வகையான குரங்கினங்கள் குரங்குகளாகவே வாழ்கின்றன…. அவை பரிணாமத்தில் முன்னேற்றங்காணமல் இருக்கின்றன.. இலச்சக்கணக்கான ஆண்டுகளாக குரங்காகவே வாழ்கின்றன அவற்றிலும் பல வகுப்பை சார்ந்தவைகள் காணப்படுகிறது. ஏன் இன்னும் மனிதனாகவில்லை…
குரங்கில் இருந்து மனிதன் பரிணமித்ததைக் காட்டும் விளக்க படத்தில் ஒவ்வொரு வளர்ச்சிப்படியும் காட்டப்பட்டுள்ளது.
குரங்கில் இருந்து மனிதன் முற்றாக பரிணமம் பெற்றுவிட்டால் இன்று குரங்கு என்ற இனம் எவ்வாறு இருக்கமுடியும்…. அவ்வாறு இருந்தால் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பரிணாமங்கள் ஒவ்வென்றும் இன்றும் வாழ்வியல் நடத்த வேண்டும் எம்முடன் இவ்வுலகில். ஆனால் அவை முற்றாக மறைந்துவிட்டன. குரங்கில் இருந்து மனிதன் பரிணமித்திருந்தால், குரங்கு வாழுமிடத்து இடைப்பரிணாமங்களும் உயிர் வாழ வேண்டும். ஏன்என்றால் அவை கூர்ப்பில் குரங்கைவிட முன்னேற்றமான நிலையில்தான் காணப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்திருந்தால், குரங்கு எதனுடைய பரிணாமம்? உதாரணத்துக்கு குரங்கு மீனின் பரிணாமம் என்றால், யானை, புலி, சிங்கம் மற்றும் ஏனய விலங்குகள் எதனுடைய பரிணாமம்? குரங்கின் பரிணாம் மனிதன் என்றால், குரங்கை போல இலட்சக்கணக்கான விலங்குகள் இருக்கின்றன இன்றும் விலங்குகளாகவே இருக்கின்றன. எந்த பரிணாமமும் நிகழ்ந்ததில்லை. இதிலிருந்து மனிதன் குரங்கிலிருந்து தோற்றம்(பரிணமிக்க) பெறவில்லை என்பது எனது கருத்தாகும்.
கொரில்லாவுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள வளர்ச்சி நிலை ஒற்றுமை 95சத வீதம் காணப்படுகின்றது. அதேசமயம் எலிக்கும் மனிதனுக்கும் இடையேயும் ஒற்றுமை காணப்படுகிறது. இது எவ்வாறு… எலிக்கும் மனிதனுக்கும்… எலி குரங்கிலிருந்தா, அல்லது மனிதன் எலியிலும் இருந்து பரிணாமம் பெற்றானா… எலியுடன் மனித பரிணமத்தை சொன்னால் பரிகாசிக்கும், குரங்குடன் சொன்னால் ஒப்புக்கொள்ளும் இதுதான் நிலமை.
கலப்பிரிப்பில் உருவாகிய இனங்களுள் எலி என்பது எவ்வாறு ஒரு தனியினமோ அவ்வாறு குரங்கும் ஒரு தனியினம்; அதன் பரிணம வளா்ச்சி அவ்வளவுதான். அவ்வாறு மனிதனும் கலப்பிரிப்பில் உருவாகிய ஒரு தனியினம்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment