வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

என் பழைய சினேகிதி....

Saturday, December 17, 2011


நட்பு எனும் ஒற்றையடிப்பாதையில்
சேர்ந்தே நடந்தோம் நாமிருவரும்..

சற்று திரும்பி பார்க்கிறேன் தூரத்தில்
சிறு புள்ளியாய் நீ!

நம்மிருவருக்கிடையில் உள்ள தூரம்
நம் ஏக்கத்தின் நீளம்!

என்ன ஆயிற்று?
ஆண் பெண் நட்பு கூடாதென
அரசாங்கம் அறிவித்துவிட்டதா?

பல வருசங்களாய் சேமித்த நட்பை
ஒரே நொடியில் செலவு செய்து விட்டோமா?

உலகத்தில் எல்லாமே எதிர்மறைகள்தான்

இரவு பகல்,துன்பம் ஆனந்தம்
கருப்பு வெள்ளை..

நீ..நான்...!

நம் இருவருக்கும் இடையில்
நாகரீகத்தை அமர்த்தி நாம்
பேசிக்கொண்டதையும்...

இருதயம் நானாகவும்
இரைப்பை நீயாகவும் வெறுபாடு கொண்டிருந்தாலும்
நமக்காக நம்மை
இரையாக்கி கொள்ளாமல் இருந்ததையும்..

உனக்கும் சேர்த்து என் இதயமும்
நானும் துடித்துக் கொண்டதையும்..

என்னால் மறக்கமுடியவில்லை
சகோதரி!

இந்த கிளையில் எத்தனையோ
பறவைகள் அமர்ந்து போனாலும்..
அமர்ந்த வேகத்தில் தடம் பதித்தது
நீதானே தோழி!

உன்னை மறக்க நினைப்பதை
மறந்து போகிறேன்
நினைப்பதில்
நினைவு தப்பாதிருக்கிறேன்!

என் நினைவிலிருந்து உன்னையோ
உன் நினைவுகளிலிருந்து என்னையோ
என்னால் தள்ள முடியவில்லை

ஏனெனில்
நீயிருப்பது என் நினைவெனும்
சிகரத்தின் உச்சியில்!

உன்னை என் மனதிலிருந்து
பொறுக்கியெடுக்கும் கைகள்
எனக்கில்லை!


13 பேர் சொன்னது....:

ஆமினா said...

அருமை அண்ணா...

ஆண் பெண் நட்பு குறுகிய காலம் தான் என்பதை கவி வரிகள் உணர்த்துது

Subramanian said...

நட்பை அழகாக செதுக்கியிருக்கிறீர்கள் சகோதரா! மிக அருமை!

Unknown said...

நன்றி ஆமினா!இந்த கவிதையின் சிலவரிகள் உனக்கு நான் பிறந்தநாள் அன்று அனுப்பிய கவிதைகள் மூலமாய் உருவானது;எடுக்கப்பட்டது;

Unknown said...

நன்றி சுப்ரமணியன் சார்!கல்லை காயப்படுத்துவதா சிற்பியின் நோக்கம்??

அன்புடன் மலிக்கா said...

நட்பின் ஆழம் அது நட்பே அறியும். மிக அருமை நட்பு

எப் பூ உதிர்ந்தபோதும்
நட்புமட்டும் உதிர்வதில்லை
மனக் கிளையிலிருந்து..

Unknown said...

மல்லிகா மேம்..தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!இன்னும் நிறைய எழுத நினைத்தேன்...அப்புறம் சிந்துபாத் தொடர் போல ஆகிவிடும்..

manjula said...

super kavinjare

Unknown said...

நன்றி சமையல் ராணி மஞ்சுளா மேம்

Unknown said...

நன்றி சமையல் ராணி மஞ்சுளா மேம்

கோலா பூரி. said...

நட்பு பற்றிய அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமைதான் மேம்..நட்பினால்தானே நீங்க இந்தபக்கம் வந்துருக்கிங்க..இல்லையா பின்ன??

elayarani said...

அண்ணா ரொம்ப அருமையான உண்மை வரிகள் by Elaya.G

Unknown said...

அப்படியா ராணி?உனக்கும் அப்படி ஏதும் நண்பர் உண்டா?

Post a Comment