வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

இட்லிகளின் சரித்திரம்

Monday, January 02, 2017

இட்லி எனும் சிலையை செதுக்க உளி தேவையில்லை;
தட்டின் குழி போதுமானது.

வெப்பம் தாங்கமுடியாமல் சட்டியின் இடுக்குகள் வழியே கண்ணீர் வடிக்காத இட்லிகள் இன்னும் மெச்சுரிட்டி அடையவில்லை என அர்த்தம்...

எப்போதும் நரக தண்டனையை அனுபவிக்கும் இட்லிகளுக்கு மறுமையில் சொர்க்கம் கிட்டுமா??

தண்டனை முடிந்தபின் அவைகளை தண்ணீர் தெளித்துதான் எழுப்ப வேண்டும்;

மரணத்திற்குப் பின்பு மனிதன் ஜனாஷா என பெயர்மாற்றம் அடைவது மாதிரி மாவு அவித்தலெனும் வேதியல் மாற்றத்திற்குப் பின்பு இட்லி என்றழைக்படுகிறது..

இட்லி ஏழைகளுக்கு பண்டிகையில் விருந்தாகும்!
காய்ச்சலெனில் எல்லோருக்கும் மருந்தாகும்.

#

0 பேர் சொன்னது....:

Post a Comment