
அது ஒரு மழைக்காலம்
கண்ணீராய் சேகரித்த சோகங்களை அவ்வப்பொழுது
அழுது வெளிப்படுத்தும் பெண்களாய் பொழிந்த பொழிவை
சேமித்து வைத்து சொட்டு சொட்டாய் செலவளிக்கும் சில தாவரங்கள்!!
வானமே குடையென பூமி நினைத்தது; அய்யகோ! குடையே பின்பு தலையை நனைத்தது!!
தலை துவட்ட
தனக்கென கைகள் இல்லாததால்
காற்றோ சூரியனோ வரட்டுமென காத்திருக்கும் பச்சை பசேலென பச்சுப்புள்ள தாவரங்கள்!!
அந்த மழைக்காலத்திலும் மழைத்துளிகளால் அம்மன் போட்டிருந்த
என் வீட்டின் ஜன்னல் கம்பிகள்!!
சுத்தம் செய்யும் நோக்கத்தோடு என் அந்தரங்கம் வரை சென்று தொட்டது முதலில் என் அன்பு அன்னை
அதற்கு பிறகு இந்த மழை !!
மழை என்ற கல் தன்னை அடிக்க அடிக்க குனிந்துகொண்டேயிருந்த குருவி ஒன்று ஒரே முயற்சியில்
சிலிர்த்ததில்
சிதறிபோயின மழைத்துளிகள்!!
இரண்டு நாள் ஊற வைத்து துவைத்த ஆடையாய் பளிச்சென படர்ந்திருந்த பரந்த வானம்; அது பறவைகள் பறந்த வானம்!!
அலசிய பிறகும்
அங்கங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் நுரைகளாய் மேகங்கள்!!
இந்த குளிரைப்போக்க கம்பளி உண்டு
உடலுக்கு!
உள்ளத்துக்கு ??
Tweet | ||||||
1 பேர் சொன்னது....:
romba aRoutham kavi.. ellame,
yogiyar
Post a Comment