வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

அம்மாவுக்கோர் தாலாட்டு

Friday, March 22, 2013





உளியால் சிலை
செய்வான் சிற்பி!
வலியால் சிசு
செய்வாள் தாய்!

அம்மா அன்பின் இலக்கணம்!



தொட்டிலில் தாலாட்டிய
அன்னையின் அன்பை
பட்டியலிடும்
பேனா என்னிடம் இல்லை...

தென்றல் மரத்தை
தாலாட்டும் அளவு எவ்வளவு?

மேகத்துக்கு பிறந்த
பிரவாகத்தில் சிதறிய
துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அளவிட அளகில்லை
அளப்பதும் அழகில்லை!

தன்னை வளர்த்த
வேருக்கு பூக்கள் தூவி
வாழ்த்துச் சொல்லும்
ஆலமரம்!

ஆலமரபிள்ளை
இலைகளால் ஆன
இக்கவிதைகளால்
வேரான அம்மாவிற்கு
விருது தரும் தருணமிது!


விலங்குகள் சில
விளங்கிகொண்ட ஒரே பெயர்!

பிள்ளை விளைந்ததிலிருந்து
தூக்கம் அம்மாவுக்கு
தொலைந்து போனது!

இரவின் நீளம்
அம்மாவின் துயரம்!

முன்பெல்லாம் நிலாவை காட்டி
சோறூட்டிய அம்மா
தங்கத்தை காட்டி இப்போது
சோறூட்டுகிறாள்!

ஆனால் நிலவைக்காட்டியா
நிலாவுக்கு சோறூட்டுவது???

அம்மாவின் அன்பையும்
அளவையால் அளக்கலாம்
அது தொட்டிலுக்கும் தாயுக்கும்
இடையே உள்ள தூரம்!

உறவின் பரிமாணம்
அண்ணன்,மச்சான்,மனைவி என
மாறிக்கொண்டே இருக்கிறது
அம்மா பிள்ளையைத்தவிர...

உலகமே
போர்வைக்குள்
போன பின்பு நாதியற்றுகிடப்பது
நானும் நீயும்தானே!

எப்போதுவெடிக்கும் எரிமலை?
எப்போது அழுமோ என் குழந்தை??
இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை

அன்னைக்கும் பிள்ளைக்கும்
காதல் உண்டு...

தோளில் சாயும்போது
பைசாநகரத்து கோபுரம்!

தள்ளியிருக்கும்போது
தண்டவாளம்!

மடியில் உட்காரும்போது
அரசனின் சிம்மாசனம்!

தாயின்பிரிவு நிரந்தரம் இல்லை

கண்ணைவிட்டு இமை
எத்தனைநேரம் பிரிந்திருக்கும்?

பிரிப்பதறிது
அம்மாவும் பிள்ளையும்
அச்சதீர்க்க ரேகைகள்!

1 பேர் சொன்னது....:

Post a Comment