வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

கடவுள் இருக்கிறாரா?

Saturday, November 12, 2011

இது ஒரு சர்ச்சையான கேள்வி...இருந்தாலும் இதற்கு பதில் தருவது என் கடமை அல்லது விருப்பம்.

கடல்,மலை,வானம் எல்லாம் படைத்தவன் இறைவன்தான் என்றால் கடவுளை கண்முன் காட்டு நம்புகிறோம் என்கிறார்கள்...

சரி...நல்ல வாதந்தான்...ஆனால் இதே ஒரு செல்போனையோ அல்லது வெறு எந்த பொருளையும் கண்முன் காட்டினால் அதை எவன் தயாரித்தான் என சொன்னாலும் ஒப்பு கொள்வார்கள்..
இதென்ன கொடுமை சார்?

ஒரு சாதாரண பேனாவோ இல்லை செல்போனோ ஆள் துணையின்றி உருவாக முடியாது என்கிறபோது..மலை,கடல்,வானம் எல்லாம் எப்படி வந்ததாம்?ஜீ...பூம்பாவா?

சரி ஒரு கற்பனை..
இந்த உலகமக்கள் அனைவரும் ஒருநாள் இறந்து போகிறார்கள்..அதற்கு பிறகு நம்மைபோல் மனிதர்கள் அல்லது நம்மைபோல் ஆறரிவுடைய வேறு எந்த படைப்போ பூமியில் தோன்றுகிறார்கள் எனகொள்வோம்..
சட்டையை பார்ப்பார்கள்...இவை பருத்தி செடிகள் தானாகவே பஞ்சை உதிர்த்தன..பஞ்சு நூலாய் மாறியது..பின் நாளடைவில் அவை பரிணாமம் அடைந்து ஆடைகளாயின என மடத்தனமாக சிந்திப்பான்..
ஒரு பேருந்தை பார்ப்பான்..இது எப்படி வந்திருக்கும் என மூளையை கசக்கி ஒரு முடிவுக்கு வருவான்..வானத்திலிருந்து இரும்புகள் பூமிக்கு வந்தன..சிறிது சிறிதாக அவை ஒன்று சேர்ந்து பேருந்தாய் உருவானது...ஒருநாள் கடல்பக்கம் போனபோது ஒரு பெரிய புயலால் பேருந்தின் மேல்பகுதி பிய்த்தெறியப்பட்டு வானத்தை நோக்கி போனது அதுதான் விமானம்..கீழ்பகுதி கடுலுக்குள் ஓடியது அதுதான் கப்பல் என்பான்..

ங்கொய்யால..உன்னோட சிந்திக்கும் திறமைக்கு ஒரு அளவே இல்லையா?

இன்னொரு விசயம் நாம் சிந்தித்து பார்த்தோமா?
விண்வெளியில் எத்தனையோ கோள்கள் சுற்றி வருகின்றன..தெரிந்தோ தெரியாமலோ அவை ஒன்றுக்கொன்று அடிக்கடி மோதி கொண்டதில்லை..யாருக்கோ கட்டுபட்டதுபோல் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன...

இதை யார் இயக்குகிறார்களாம்?
இரவு, பகல் என்ற விசயத்திற்கு வருவோம்..பூமி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சூரியனை சுழல்கிறது..இதனால்தான் இரவுபகல் ஏற்படுகின்றது..சந்தோசம்..

இது தானாகவேதான் நடக்கிறது எனில் ஏன் ஒரு நாள் கூட 20 மணி நேரம் பகலாகவும்..நான்கு மணி நேரம் இரவாகவும் மாறுவதில்லை...
ஏன் நாட்கள் 365 லிருந்து 500 ஆகவோ இல்லை 600 ஆகவோ அதிகமாவதில்லை..இதற்கு யார் காரணமாக இருக்க முடியும்?
...ஜீ பூம்பா?

இதைபற்றி யாரிடமாது விசாரித்து பார்த்தால் தெரிந்தோ தெரியாமலோ "எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்"என்பார்கள்..

சரி மனிதன் தான் சொந்த திறமையில்தான் வசதியாக இருக்கிறான்..சாப்பிடுகிறான் எனில்..எல்லா மனிதர்களும் ஒரே மாதுரி இருக்க வேண்டுமல்லவா?
எப்படி உருவானது நடுத்தர வர்க்கமும்,எல்லா தேவைகளுக்காகவும் மற்றவர்களையே நாடும் கூட்டமும்..????

சிந்த்திப்பீர்களாக!

கடவுளை நம்புங்கள்!நன்மையை ஏவி தீமையைதடுங்கள் !


12 பேர் சொன்னது....:

ஆமினா said...

அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

களத்தில் இறங்கியாச்சு போல :-)

கலக்குங்க

வாழ்த்துக்கள்

Unknown said...

அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹ்..
ஆமாம் ஆமினா..ஏதோ என்னால் முடிந்தது..
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

ஸாதிகா said...

அலைக்கும் சலாம் வரஹ்

புது வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.அருமையாக சிந்தித்து அழகானதொரு பதிவை பகிர்ந்துள்ளீர்கள்.தொடருங்கள்.பிறரின் வலைப்பூக்களையும் தொடர்ந்து கருத்துக்கள் சொல்லுங்கள்.

Unknown said...

சாதிகா மேம்..நன்றி! நீங்க வருகை தருவீர்கள் என நான் எதிர்பார்ககவிலை..சந்தோசமா இருக்கு..தொடர்ந்து வாங்க

கோலா பூரி. said...

புது வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள். நல்ல விஷயத்துடன் நல்ல ஆரம்பம்.. தொடர்ந்து எழுதுங்க படிக்க காத்துகிட்டு இருக்கோம்.

Unknown said...

எங்கே எழுதுறது?எப்பவாச்சும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்..அப்பத்தான் எழுத முடிகிறது...முயற்சிசெய்கிறேன்..உங்களஎல்லாம் நம்பிதானே ப்ளாக் ஆரம்பித்து இருக்கிறேன்

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நல்ல பதிவு

மேலும் தொடர வாழ்த்துகள்!

faiz said...

Assalamu allaikum(Varh),

Shiek bhai,u did a good job and give the wonderful explanation go ahead,All the very best for your attempt.

Allah Hafees

Anonymous said...

True. Otherwise, no body else can create such a complex but perfectly engineered human body with a mind which is much more complex than the body.

Unknown said...

நன்றி குலாம்!
அலைக்கும்சலாம் ரஹ்மதுல்லாஹ்....நீங்களும் அடிக்கடி வாங்க...தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

Unknown said...

ஃபைசல்!

அலைக்கும் சலாம் வரஹ்..

எல்லாம் உனது அன்பும் ஆசிர்வாதமும்.....அல்ஹம்துலில்லாஹ்

Unknown said...

டியர் அனானிமஸ்!
இப்ப என்ன சொல்ல விரும்புறிங்க?யார் குழப்பம் பண்றா?மனுசனா?ஆக இப்ப குழப்புறது நீங்கதான்...

Post a Comment